சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

HomeFact Checkபிரதமர் மோடி கண்ணீர் விட்டதைக் குறிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் முதலை படத்தை வெளியிட்டதா?

பிரதமர் மோடி கண்ணீர் விட்டதைக் குறிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் முதலை படத்தை வெளியிட்டதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பிரதமர் மோடி, கண்ணீர் சிந்தியதைக் கேலி செய்யும் வகையில் பிரபலமான அமெரிக்க செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் முதலை ஒன்று கண்ணீர் வடிப்பதைப் போன்று முகப்புப் பக்கத்தில் பதிவிட்டதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பிரதமர்
Source: Facebook

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் இரண்டாவது அலையில் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கி வருகிறது.

மக்களின் உயிரைக்காக்க மருத்துவர்களும் முன்களப்பணியாளர்களும் ஒரு சில மாநில அரசுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தொடர்பாக வாரணாசியில் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒரு சில நிமிடங்கள் கொரோனாவால் மரணமடைந்தவர்களை எண்ணி கண்ணீர் சிந்தினார் என்கிற வீடியோ செய்திகளில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், தி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் வெள்ளிக்கிழமை (21/05/2021) அன்றைய பதிப்பின் முகப்புப் பக்கத்தில் இந்திய பிரதமரின் அழுகை என்கிற தலைப்புடன் முதலை ஒன்று கண்ணீர் வடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளதாக புகைப்படச் செய்தி ஒன்று தமிழ், இந்தி உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் வைரலாகி வருகிறது.

பிரதமர்
Source: Facebook

Facebook Link

பிரதமர்
Source: Facebook

Facebook Link

பிரதமர்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

பிரதமர் மோடி, கொரோனா மரணங்களை எண்ணி கண்ணீர் சிந்தியதை கேலி செய்து முதலை படம் ஒன்றினை நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் முன்பக்கத்தில் வெளியிட்டதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய முதலில் அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

ஆனால், அதில் குறிப்பிட்ட முடிவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, தி நியூயார்க் டைம்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக வெள்ளிக்கிழமையன்று வெளியான சர்வதேச பதிப்பின் முன்பக்கத்தை கண்டறிந்தோம்.

பிரதமர்
Source: NY Times

அதில், சிரியாவின் சோலார் பேனல்கள் குறித்த புகைப்படம் ஒன்றே குறிப்பிட்ட வைரல் பதிவில் முதலை பதிவிடப்பட்டுள்ள இடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், குறிப்பிட்ட வைரல் புகைப்படமானது ‘தி டெய்லி நியூயார்க் டைம்ஸ்’ என்னும் பகடிக்குறிய இணையதளத்தில் இந்த முதலைப்படம் இடம்பெற்றுள்ளது. அதனை அவர்களே ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

Source: Twitter

மேலும், இது நையாண்டி செய்யும் வகையிலான புகைப்படம் மட்டுமே என்றும் அவர்கள் மற்றொரு பதிவில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Source: Twitter

இதுகுறித்த உண்மையறியும் சோதனை எங்களது ஆங்கிலப்பக்கத்திலும் வெளியாகியுள்ளது. எனவே, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பிரதமர் மோடியின் கண்ணீர் குறித்த எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது நமக்கு உறுதியாகிறது.

Conclusion:

பிரதமர் மோடி, கொரோனா மரணங்களை எண்ணி கண்ணீர் சிந்தியதை கேலி செய்து முதலை படம் ஒன்றினை நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் முன்பக்கத்தில் வெளியிட்டதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது. இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Satire

Our Sources:

New York Times: https://static01.nyt.com/images/2021/05/21/nytfrontpage/INYT_frontpage_global.20210521.pdf

Parody Twitter account The Daily New York Times: https://twitter.com/NewYokNewz/status/1395941899593129989?s=20

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular