சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

HomeFact Checkஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் பதிவு

கொரானாவின் இரண்டாம் அலை முந்தைய நிலையைக் காட்டிலும் மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை கட்டில்கள் தட்டுப்பாடு போன்றக் காரணங்களால் மக்கள் தினம்தினம் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கொரோனா குறித்தும், கொரோனா சிகிச்சைக் குறித்தும் பலவிதமான தகவல்களை பரப்பி தேவையில்லாத குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் சாடி பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது, ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் பதிவு - 3

Archive Link: https://archive.ph/8OpvC

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் பதிவு - 1

Archive Link: https://archive.ph/aTJw0

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் பதிவு - 2

Archive Link: https://archive.ph/wNCLz

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று உத்திரப்பிரதேச முதல்வர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து இந்த தகவலின் பின்னனி குறித்து தேடினோம்.

நம் தேடலில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஆக்ஸிஜனை நிறுத்தி சோதனை ஓட்டம் (mock drill) செய்துள்ளனர் எனும் தகவல் இதுத் தொடர்பாக கிடைத்தது.

ஆக்ராவின் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஏப்ரல் 26 அன்று ஆக்ஸுஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக அம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனம் கைவிரித்ததால், 5 நிமிடம்  ஆக்ஸிஜனை நிறுத்தி எந்தெந்த நோயாளிகளுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படும் என சோதனை செய்துள்ளனர்.

இச்சோதனைக் குறித்து இம்மருத்துவமனையின் முதலாளியான டாக்டர் அரிஞ்ஜய் ஜெயின் என்பவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சோதனையில் 22 நோயாளிகளின் உடல் நீல நிறம் அடைந்ததாக இவ்வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

இவ்வீடியோவை கிழக்கு உத்தரப்பிரதேச அகில இந்தியக் காங்கிரசு செயற்குழுவின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வாத்ரா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மத்திய அரசையும் உத்திரப்பிரதேச அரசையும் சாடியுள்ளார்.

மேலும் இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை  வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் தகவலின் உண்மைத்தன்மை

இந்நிகழ்வு குறித்து மேலும் சில ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே படிக்கலாம்.

மேற்கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், உத்திரப்பிரதேசத்தில் மருத்துவமனை ஒன்றில்  ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டதாக வந்தச் செய்தி உண்மையானதே, ஆனால் இந்நிகழ்வுக்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இந்நிகழ்வு  உத்திரப்பிரதே மாநிலத்தில் நடந்துள்ளதைத் தாண்டி இந்நிகழ்வுக்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் எவ்வித சம்மந்தமும் இருப்பதாக எந்த ஒரு தரவும் இல்லை.

இதன்படி பார்க்கையில் ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியாகின்றது.

Also Read: வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு! வைரலாகும் வீடியோ உண்மையானதா?

Conclusion

சமூக வலைத்தளங்களில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறான ஒன்று என்பதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Ms Priyanka Gandhi Vadra: https://twitter.com/priyankagandhi/status/1402122966352031749

Indian Express: https://indianexpress.com/article/cities/lucknow/agra-hospital-paras-hospital-oxygen-supply-video-7349531/

Hindustan Times: https://www.hindustantimes.com/videos/news/agra-hospital-shut-down-over-mock-oxygen-drill-patients-kin-feel-the-heat-101623231070759.html

Deccan Herald: https://www.deccanherald.com/national/agra-hospital-shut-down-after-oxygen-mock-drill-fiasco-995486.html

Times Now News: https://www.timesnownews.com/india/article/paras-hospital-agra-hospital-shut-amid-outrage-over-death-of-22-patients-in-mock-oxygen-drill/768139


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular