வெள்ளிக்கிழமை, மே 3, 2024
வெள்ளிக்கிழமை, மே 3, 2024

HomeFact CheckFact Check: உத்திரகோசமங்கை மரகத நடராஜர் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறியதா?

Fact Check: உத்திரகோசமங்கை மரகத நடராஜர் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறியதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim : உத்திரகோசமங்கை மரகத நடராஜரின் கதிர்வீச்சால் நிறம் மாறி ஒளிரும் அபிஷேக பால்
Fact: வைரலாகும் தகவல் தவறானதாகும்.  2023ஆம் ஆண்டு அபிஷேக நிகழ்வு இது. பாலின் நிறம் அபிஷேகத்தில் மாறவில்லை.

உத்திரகோசமங்கை மரகத நடராஜரின் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறி ஒளிர்வதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு பாலாபிஷேகம், பாலின் நிறம் என்னமாய் மரகதத்தின் கதிர்வீச்சால் நிறம்மாறி ஒளிர்கிறது. இதை பார்த்தவர்களின் மனதிலும் இதே அதிர்வலைகள் தோன்றி வாழ்வை மேன்மையாக்கும். இதனை அதிகம் பகிரவும். சிவாயநம.” என்பதாக இந்த வீடியோ பரவி வருகிறது.

Screengrab from Facebook/Panbarasu
Screengrab from Twitter @kaippulla123
Screengrab from Facebook/Kirathagan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விவேகானந்தரின் தத்துவத்தால் கவரப்பட்டு டாட்டா நிறுவனத்தை ஜாம்செட்ஜி டாடா உருவாக்கினார் என்று பிரதமர் பேசியதாக பரவும் தவறான தகவல்!

Factcheck / Verification

உத்திரகோசமங்கை மரகத நடராஜரின் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறி ஒளிர்வதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோவை ஆராய்ந்தபோது அது மிகப்பெரிய திரைகள் மூலமாக நிகழ்வுகளை வெளியில் லைவ் டெலிகாஸ்ட் செய்து ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோ போலத் தெரிந்தது. ஏனெனில், குறிப்பிட்ட வீடியோவில் சிலர் எழுந்து செல்லும்போது வைரல் வீடியோவில் நடராஜர் சிலை வீடியோவில் அடியில் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளதைக் காண முடிந்தது.

தொடர்ந்து, திரு உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசன வீடியோக்களை ஆய்வு செய்தபோது, ”LIVE : திரு உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனம் உங்கள் TNTV இல் தொடர் நேரலையாக-2023” என்று தமிழ்நேசன் டிவி வெளியிட்டிருந்த நேரலை வீடியோ நமக்குக் கிடைத்தது.

வைரலாகும் வீடியோவில் இருக்கும் அர்ச்சகர்களின் காட்சியும், இந்த நேரலை வீடியோவின் அபிஷேக காட்சிகளும் ஒத்துப்போனது.

Original Live Video
Viral video

தொடர்ந்து, நம்முடைய ஆய்வில் வைரலாகும் வீடியோ நிகழ்வு, தமிழ்நேசன் டிவி வீடியோவிலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், பாலின் நிறம் வைரல் வீடியோவில் இருப்பது போன்று தமிழ்நேசன் லைவ் வீடியோவில் மாறியிருக்கவில்லை. மேலும், அது நேரடியாக கருவறையில் எடுக்கப்பட்ட வீடியோ லைவ் என்பதும் கருவறைக்கு வெளியில் கூடியிருக்கும் பக்தர்களால் உறுதியானது. எனவே, வைரல் வீடியோ மற்றொரு திரையில் அபிஷேக நிகழ்வு ஒளிப்பரப்பாகிய போது எடுக்கப்பட்டது என்பதும் இதன் மூலமாக தெளிவாகியது. வீடியோ காட்சியின் ஒளி மாறுபாட்டாலேயே பால் நிறம் மாறியிருப்பது போல வீடியோவில் தெரிகிறது என்பதை இதன்மூலமாக அறிய முடிந்தது.

2023 Uttarakosamangai abhishegam

இதற்கு முன்பாக, பல வருடங்களாக மரகத நடராஜர் பால் அபிஷேக நிகழ்வு வீடியோக்கள் யூடியூபில் இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றிலும் பாலின் நிறம் மாறியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Fact Check: பிரதமர் மோடியின் 1983ஆம் வருட MA டிகிரியில் 1981ல் இறந்த துணை வேந்தர் கையெழுத்திட்டாரா?

Conclusion

உத்திரகோசமங்கை மரகத நடராஜரின் கதிர்வீச்சால் அபிஷேக பாலின் நிறம் மாறி ஒளிர்வதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, TNTV Live, Dated January 05, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular