புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkபெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டுவண்டியில் செல்லுங்கள் என்றாரா ஹெச்.ராஜா?

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டுவண்டியில் செல்லுங்கள் என்றாரா ஹெச்.ராஜா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா அவர்கள் சொல்லியதாக செய்திப்புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

பெட்ரோல்
Source: Facebook

அதனை நமது வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி அதன் உண்மைத்தன்மை குறித்து அறியக் கோரியிருந்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பாக உள்ளது. தமிழகக் கட்சிகளும், அவற்றின் கூட்டணிக் கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

ஆனாலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் விலை, டீசல் விலை ஆகியவற்றின் விலையேற்றத்தால் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்துள்ளது.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா “பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள்” என்று கூறியதாக செய்திப்புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவுகிறது.

பெட்ரோல்
Source: whatsapp

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்று ஹெச்.ராஜா கூறியதாகப் பரவிய புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

ஆனால், ஹெச்.ராஜா அவ்வாறு கூறியதாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு புதியதலைமுறை செய்திப்பிரிவின் செய்தி புகைப்படத்தைப் போல அமைந்திருந்ததால் அந்த குறிப்பிட்ட புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பிப்ரவரி 20, 2021 அன்று வெளியான புதியதலைமுறையின் நியூஸ் கார்டினை ஆராய்ந்து பார்த்தோம்.

அதில், நமக்கு கிடைத்த நியூஸ்கார்டில் ஹெ.ராஜா “பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விடக்குறைவுதான்” என்று தெரிவித்துள்ளார் என்பதும், அதனை போட்டோஷாப் செய்து மாட்டுவண்டியில் செல்லுங்கள் என்று அவர் கூறியதாக எடிட் செய்துள்ளனர் என்பது நமக்குத் தெரிய வந்தது.

பெட்ரோல்
Source: Facebook

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

பெட்ரோல்
Top: Original
பெட்ரோல்
Bottom: Fake

Conclusion:

பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்றால் மாட்டுவண்டியில் செல்லுங்கள் என்று ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Puthiyathalaimurai: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/photos/2119261768230720/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular