பாஜகவினர் மீதான பாலியல் வழக்குகள் தங்கள் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் மொத்த அரசியல் களமும் மிகவும் பரப்பரப்பாக உள்ளது. இம்முறை எப்படியாவது அதிக இடங்களை பெற்று ஆட்சி அதிகாரத்தைப் கைப்பற்ற வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் மும்முரமாக உழைத்து வருகின்றன.
மத்தியில் ஆளும் பாஜகவும் இம்முறை எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று மிகவும் கடுமையாக உழைத்து வருகின்றது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையேற்றம், சமையல் எரிவாயு விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.
சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களிடம் கேட்டதற்கு, பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது என்று பதிலளித்தார்.
இதேபோல் பாஜகவினர் மீதான வழக்குகள் பாஜகவின் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link:https://archive.vn/HMr5p

Archive Link: https://archive.vn/xbAHK

Archive Link: https://archive.vn/a7scs
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பாஜகவினர் மீதான பாலியல் வழக்குகள் தங்கள் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக பரவும் செய்தி தந்தி டிவியின் புகைப்படச் செய்தியின் அடிப்படையிலேயே பரவுகின்றது.
ஆகவே முதலில் இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி தந்தி டிவியில் வந்ததா என்பதை உறுதி செய்ய தந்தி டிவியின் சமூக ஊடகப் பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். ஆனால் நம் தேடலில் இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.
இதன்பின் ஆய்வின் அடுத்தக் கட்டமான தந்தி டிவியின் செய்திப் பிரிவைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம். அவர்கள்,
“இது தவறானச் செய்தி, இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை”
என்று நமக்கு பதிலளித்தனர்.
ஆகவே இதனடிப்படையில் பார்க்கும்போது பாஜகவினர் மீதான பாலியல் வழக்குகள் தங்கள் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக பரவும் தகவல் தவறான ஒன்று என்பது நமக்கு உறுதியாகின்றது.
Conclusion
பாஜகவினர் மீதான பாலியல் வழக்குகள் தங்கள் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=3139753132932320&id=100006929914841
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=1616909061850984&id=100005957165418
Thanthi TV News Desk:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)