Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Politics
மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்து, குஜராத் முதல்வர் உயிரிழந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.vn/o1KRH
வதோதரா உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வதோதரா நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென விஜய் ரூபானி மயங்கிச் சரிந்தார்.
விஜய் ரூபானி இஸ்லாம் மதத்தை தரக் குறைவாக பேசியதாகவும், அதனால் அவர் பிரச்சார மேடையிலேயே உயிரிழந்ததாகவும் கூறி இந்நிகழ்வு குறித்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.vn/W0nmB
Archive Link: https://archive.vn/eJCyo
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இஸ்லாம் மதத்தைக் குறித்து இழிவாகப் பேசினார், அவ்வாறு பேசியதால் அவர் மேடையிலேயே உயிரிழந்தார் என இரண்டு விஷயங்கள் இவ்வீடியோவை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
ஆனால் சமூக வலைத்தளங்களில் பரப்புவதுபோல் விஜய் ரூபானி இஸ்லாம் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை.
“குஜராத்தில் சமீப காலமாக லவ் ஜிஹாத் குற்றங்கள் அதிகம் நடைப்பெறுவதால் கூடிய விரைவில் லவ் ஜிஹாத்துக்கு எதிரான சட்டம் குஜராத்தில் அமலுக்கு வரும்”
என்று மட்டுமே அவ்வீடியோவில் பேசியுள்ளார்.
( நியூஸ்செக்கர் குஜராத்தியின் ஃபேக்ட்செக்கர் உதவியினால் குஜராத் முதல்வரின் பேச்சு தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது)
இதன்படி பார்க்கையில் விஜய் ரூபானி இஸ்லாம் மதத்தை குறித்து இழிவாகப் பேசினார் என்று பரப்பப்படும் தகவல் தவறானது என்பது நமக்கு தெளிவாகிறது.
இதன்பின் விஜய் ரூபானி இவ்வாறு பேசியதால் உயிரிழந்து விட்டார் என பரப்பப்படும் தகவல் குறித்து ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில் இத்தகவலும் தவறான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் விஜய் ரூபானி மயங்கிய விழும்போது அருகிலிருந்த காவலர்கள் தாங்கிப் பிடித்துள்ளனர். இதன்பின் அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு, அகமதாபாத் கொண்டு செல்லப்பட்டு அங்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு இலேசான கொரானா இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுக்குறித்த செய்திகளை இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
விஜய் ரூபானி நேற்று(18/02/2021) கூடதனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதன்படி பார்க்கையில் அவர் உயிருடன் நலமாக உள்ளார் என்பது நமக்கு தெளிவாகிறது.
குஜராத் முதல்வர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது சரிந்து விழுந்து உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/100978178359729/videos/245107193932570
Facebook Profile: https://www.facebook.com/nabinabi/videos/268697138215487
Hindu Tamil: https://www.hindutamil.in/news/india/634060-gujarat-cm-vijay-rupani-tests-positive-for-coronavirus-1.html
Puthiya Thalaimurai: http://www.puthiyathalaimurai.com/newsview/93604/Gujarat-CM-Vijay-Rupani-tests-positive-for-COVID-19-admitted-to-hospital
Vijay Rupani: https://twitter.com/vijayrupanibjp/status/1362412233154826257
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 10, 2025
Ramkumar Kaliamurthy
July 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
July 8, 2025