ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 1, 2021
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 1, 2021
HomeFact Checksகுடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித்தொகையா?

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித்தொகையா?

“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டம், மற்றும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் ஆகியவை ரேசன் அட்டைகளில் குடும்பத் தலைவர்கள் பெயர் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கே பொருந்தும். ரேசன் அட்டைகளில் குடும்பத் தலைவர்கள் பெயர் இருப்பவர்களுக்கு இச்சலுகை கிடைக்கப்பெற மாட்டாது” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததாக பாலிமர் தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித் தொகை என்று பரவும் தகவல்
Source: Facebook

கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தையே பரபரப்பாக வைத்திருந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வழியாக கடந்த செவ்வாய்க் கிழமை (06/04/2021) அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்துவிட்டது.

ஆயினும் தேர்தல் குறித்த பதிவுகள், விவாதங்கள் இன்னும் முடிந்தபாடில்லை. தேர்தல் தொடர்பாகவும், தேர்தலில் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பாகவும் பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த தேர்தலில் ஆளும் அதிமுக வெற்றியைப் பெற பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமான வாக்குறுதி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டம், மற்றும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டங்களாகும்.

ஆனால் தற்போது ரேசன் அட்டையில் குடும்பத் தலைவர்கள் பெயர் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கே மேற்கூறிய சலுகைகள் பொருந்தும் என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாக பாலிமர் தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித் தொகை என்று பரவும் பதிவு - 1
Source: Facebook

Archive Link: https://archive.ph/2C2Yo

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித் தொகை என்று பரவும் பதிவு - 2
Source: Facebook

Archive Link: https://archive.ph/NqkFY

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித் தொகை என்று பரவும் பதிவு - 3
Source: Facebook

Archive Link: https://archive.ph/4pDVq

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கும் திட்டம், மற்றும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் ஆகியவை  ரேசன் அட்டைகளில் குடும்பத் தலைவர்கள் பெயர் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று முதல்வர் கூறினாரா என்பதை அறிய, பாலிமர் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இவ்வாறு புகைப்படச் செய்தி பதிவிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம்.

இவ்வாறு தேடியதில்  வைரலாகும் புகைப்படச் செய்தியை பாலிமர் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.

இதன்பின் வைரலாகும் இச்செய்திக் குறித்து பாலிமர் தொலைக்காட்சியின் செய்தி துறையைத் தொடர்புக் கொண்டு கேட்டோம். அவர்கள்,

“இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இது பொய் செய்தி”

என்று நமக்கு விளக்கமளித்தனர்.

இதன்பின் வைரலாகும் புகைப்படச் செய்தியை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Goodle Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில் வைரலாகும் புகைப்படச் செய்தி, பாலிமர் தொலைக்காட்சியில் வெளிவந்த மற்றொரு புகைப்படச் செய்தியை எடிட் செய்து போலியாகத் தயாரிக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

வாசகர்கர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும் எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித் தொகை என்று பரவும் தகவலின் உண்மைத்தன்மை.

Conclusion

“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டம், மற்றும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் ஆகியவை  ரேசன் அட்டைகளில் குடும்பத் தலைவர்கள் பெயர் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கே பொருந்தும். ரேசன் அட்டைகளில் குடும்பத் தலைவர்கள் பெயர் இருப்பவர்களுக்கு இச்சலுகை கிடைக்கப்பெற மாட்டாது” என்று என்று முதல்வர் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Polimer News:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular