திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

HomeFact Checkமுன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சிக்கிய பணம் மற்றும் நகை புகைப்படமா இது?

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சிக்கிய பணம் மற்றும் நகை புகைப்படமா இது?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிலும், அவரது அக்கா வீட்டிலும் கிடைத்த பணம் மற்றும் நகை என்பதாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

முன்னாள்
Source: Facebook

அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலையில் தொடங்கி தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் அமைந்துள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருக்கு நெருக்கமான மேலும் 52 பேரின் வீடுகளிகளிலும், இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், “அமைச்சர் வேலுமணி வீட்டில் கைப்பற்றிய சில்லறை காசுகள்” என்றும், “வேலுமணி அக்கா வீட்டில் சிக்கிய சில்லறை காசு” என்றும் பணம் மற்றும் நகை இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள்
Source: Facebook

Facebook Link

முன்னாள்
Source: Facebook

Facebook Link

முன்னாள்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகை என்று பரவுகின்ற புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே ஐடி ரெய்டு தொடர்பான பல்வேறு செய்திகளுக்கு அப்புகைப்படம் ரெபரென்ஸ் இமேஜாக உபயோகிக்கப்பட்டு வந்தது நமக்குத் தெளிவானது.

முன்னாள்

மேலும், கடந்த முறை தமிழக முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற ரெய்டு நடவடிக்கையின்போதும் இதே புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்துள்ளது என்பதும் தெரியவந்தது.

மேலும், அக்குறிப்பிட்ட புகைப்படம் கடந்த டிசம்பர் 11, 2016 ஆம் ஆண்டு கர்நாடகா மற்றும் கோவாவில் நடைபெற்ற ஐடி ரெய்டின்போது, சித்ரதுர்கா மற்றும் ஹுப்பளி மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட பணம் என்று டெக்கன்ஹெரால்ட் செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள்

Conclusion:

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகை என்று பரவுகின்ற புகைப்படத் தகவல் தவறானதாகும் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Result: False

Our Sources:

Deccan Herald: https://www.deccanherald.com/content/585982/taxmen-seize-rs-47-crore.html

Indian Express: https://indianexpress.com/article/cities/ludhiana/ludhiana-cash-seized-new-notes-jewellery-new-currency-demonetisation-4431473/

The better India: https://www.thebetterindia.com/161946/irs-officer-hero-madhya-pradesh/

Vikatan: https://www.vikatan.com/government-and-politics/politics/raid-in-former-admk-minister-sp-velumani-properties

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular