Fact Check
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட் குறித்து இவ்வாறு கூறினாரா?
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியதுபோல் இருக்கிறது தமிழக அரசின் பட்ஜெட் என்று கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் குறித்து அவரவர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் அவர்கள், கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியதுபோல் இருக்கிறது திமுக அரசின் பட்ஜெட் என்று விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியதுபோல் இருக்கிறது திமுக அரசின் பட்ஜெட் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்ததாக வைரலாகும் புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் உண்மைதானா என்பதை அறிய, முன்னதாக புதிய தலைமுறை டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு கேட்டோம்.
அதற்கு அவர்,
“இது போலியான நியூஸ்கார்ட்”
என்று விளக்கமளித்தார்.
இதன்பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட் குறித்து கூறிய கருத்து குறித்து தேடுகையில்,” மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கிதான் தமிழ்நாடு பட்ஜெட், வாக்குறுதிகளை கொடுத்து விட்டு கடன், கடன் என்கின்றனர்: யானை பசிக்கு சோளப் பொரி போல உள்ளது தமிழ்நாடு பட்ஜெட் என்று ஜெயக்குமார் அவர்கள் கூறியதாக ஆகஸ்ட் 13ஆம் தேதி புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே, மேற்கண்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: ஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக தென்னங்கன்றை நட்டாரா அமைச்சர்?
Conclusion
கடன் கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கி அனுப்பியதுபோல் இருக்கிறது தமிழக அரசின் பட்ஜெட் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)