ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றாரா பிரியா மாலிக்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றாரா பிரியா மாலிக்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக வந்தத் தகவல்

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டஒலிம்பிக்  விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக் கிழமை (ஜூலை 23) ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோவில் ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்கின்றது. இதில் பிரியா மாலிக் என்பவர் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக வந்தத் தகவல் - 3

Facebook Link | Archive Link

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக வந்தத் தகவல் - 1

Facebook Link | Archive Link

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக வந்தத் தகவல் - 2

Facebook Link | Archive Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இருக்கைகளுக்கு பதிலாக படுக்கைகள் மாற்றம்; வைரலாகும் புகைப்படம் கோவை கே.ஜி. சினிமாஸ் திரையரங்கில் எடுக்கப்பட்டதா?

Fact Check/Verification

பிரியா மாலிக் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, உரிய கீ வேர்டுகளை பயன்படுத்தி இதுக்குறித்து கூகுளில் தேடினோம்.  

நம் தேடலில் பிரியா மாலிக் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றது உண்மைதான் என்பதும், ஆனால் அதை அவர் ஒலிம்பிக் போட்டியில் வெல்லவில்லை, ஹங்கேரியில் நடந்து வரும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றுள்ளார் என்பதும் நமக்கு தெளிவாகியது.

Archive Link

டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற்று வரும் இதேவேளையில், ஹங்கேரி நாட்டில் உள்ள புடோபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் 73 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா மாலிக் கலந்துக் கொண்டார். இவர் இறுதிப் போட்டியில் பெலாரஸ் நாட்டின் க்சோனியா படபோவிச்சுடன் மோதி 5-0 புள்ளிக் கணக்கில் வெற்றி அடைந்து  தங்கப் பதக்கம் வென்றார்.

Courtesy: Polimer News

இதுக்குறித்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

Also Read: தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

Conclusion

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும். இவர் மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது உண்மையே. ஆனால் அவர் பதக்கம் வென்றது ஒலிம்பிக் போட்டியில் அல்ல, அவர் வென்றது உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலாகும்.

இத்தகவலை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

My Gov india: https://twitter.com/mygovindia/status/1419190285452550147

Polimer News: https://www.youtube.com/watch?v=ZL5VktamRdQ


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular