வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

HomeFact Checkடோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Source: Facebook

உலக நாடுகளுக்கிடையே ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் கடந்த வெள்ளிக் கிழமை (ஜூலை 23) கோலாகலமாக தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.

இப்போட்டிகளில் இந்தியாவுக்கு இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.  இப்பதக்கத்தை மீராபாய் சானு மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வென்றுள்ளார்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வின்போது சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பரவும்  வீடியோ - 1

Facebook Link | Archive Link

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பரவும்  வீடியோ - 2

Facebook Link | Archive Link

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பரவும்  வீடியோ - 3

Facebook Link | Archive Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றாரா பிரியா மாலிக்?

Fact Check/Verification

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய, அவ்வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக (Key Frames) பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.

இவ்வாறு செய்ததன் மூலம் வைரலாகும் வீடியோவின் பின்னணி குறித்து நம்மால் உணர முடிந்தது.  உண்மையில் இவ்வீடியோ டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வின்போது எடுக்கப்பட்டதல்ல.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் மங்கோலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது  அங்குள்ள ஆர்ட் ஆஃப் லிவிங் (Art of Living) எனும் அமைப்பு மூலம் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தருணத்தில்  எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது ஒலிம்பிக் போட்டியில் எடுக்கப்பட்டதாக தற்போது பரப்பப்படுகின்றது.

மங்கோலியாவில் பிரதமருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த வீடியோ பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Archive Link

இதில் ஒரு பகுதியை எடுத்தே டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்சமயம் பரப்பப்படுகின்றது.

இந்த பொய் தகவலானது தமிழ் தவிர்த்து இந்தி உட்பட வேறு மொழிகளிலும் பரவி வருகின்றது.  இதை நியூஸ்செக்கரின் இந்தி சார்பிலும் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளோம். அதை இங்கே படிக்கலாம்.  

Also Read: தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

Conclusion

டோக்கியோ ஒலிம்பிக்கில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ தவறானதாகும். இவ்வீடியோ உண்மையில் 2015 ஆம் ஆண்டு மங்கோலியாவில் எடுக்கப்பட்டதாகும். 

இத்தகவலை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misplaced Context

Our Sources

YouTube video published by Prime Minister Narendra Modi


      

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular