பிரதமர் மோடிக்கு என் வெற்றியைக் கொண்டாட அருகதை இல்லை என்பதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. பிரபல செய்தித்தளம் இந்த செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ளது என்பதாகக் கூறி பகிர்ந்து வருகின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தடகளம் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில், “என் வெற்றியை கொண்டாட மோடிக்கு தகுதி இல்லை. மோடியைக் கிழித்த நீரஜ் சோப்ரா” என்னும் வீடியோ டெம்ப்ளேட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
பிரதமர் மோடிக்கு என் வெற்றியைக் கொண்டாட தகுதியில்லை என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியதாகப் பரவும் செய்தி குறித்த உண்மைத்தன்மை அறிய அது பற்றி ஆய்வு செய்தோம்.
குறிப்பிட்ட டெம்ப்ளேட் புகைப்படத்தில் புதியதமிழகம் நியூஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
புதியதலைமுறை செய்திகளின் நியூஸ் லோகோ போன்றே வடிவமைக்கப்பட்ட ஒரு யூடியூப் பக்கம் அது என்பது நமக்கு உறுதியானது. மேலும், புதியதலைமுறை செய்தியாளர்களிடமும் இதனை உறுதிப் படுத்திக் கொண்டோம்.
பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் ஆளுமைகளும் நீரஜ் சோப்ராவின் வெற்றியைப் பாராட்டி ட்விட் வெளியிட்டிருந்தனர்.
மேலும், நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளரான உவ் ஹான், ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிலையில் கடந்த ஜூன் மாதம் தெரிவித்த கருத்தொன்றின் மூலம் மட்டுமே இந்த வீடியோவிலும் முழுவதுமாக உருவாக்கியுள்ளனர்.

அதிலும், டெம்ப்ளேட் தவிர உள்ளே எங்கேயும் நீரஜ் சோப்ரா, பிரதமர் மோடி குறித்து கூறியதாக மேற்கண்ட வாசகங்களோ, நீரஜ் சோப்ராவின் அதிகாரப்பூர்வ வீடியோ பைட்டோ இடம் பெறவில்லை. மேலும், நீரஜ் சோப்ரா அவ்வாறு கூறியதாக வேறு எந்த செய்தி நிறுவனமும் செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
பிரதமர் மோடிக்கு என் வெற்றியைக் கொண்டாட தகுதியில்லை என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியதாகப் பரவும் செய்தி போலியானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: False
Our Sources:
Indian Express: https://indianexpress.com/article/sports/sport-others/indias-german-javelin-coach-uwe-hohn-slams-olympics-preparation-7360808/
Neeraj Chopra: https://twitter.com/Neeraj_chopra1
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)