திமுக தலித் அணி தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னியரசு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகிப்பவர் வன்னியரசு. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காக பல்வேறு முன்னெடுப்புகளை சமூகப் பாதுகாப்பு சார்ந்த போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ள கட்சி விடுதலைச் சிறுத்தைகள் ஆகும்.
Also Read: 30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற மோடி படத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டாரா அண்ணாமலை?
இந்நிலையில், “தலித் அணி தலைவர் வன்னியரசு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னியரசுவை திமுக கட்சியின் தலித் அணி தலைவராக நியமித்து கழகத்தலைவர் ஸ்டாலின் உத்தரவு” என்கிற வாசகங்கள் அடங்கிய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
திமுக தலித் அணி தலைவராக வன்னியரசு நியமிக்கப்பட்டுள்ளார் என்று பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அந்த கார்டை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அப்போது, குறிப்பிட்ட நியூஸ் கார்டினையோ செய்தியையோ நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை என்பது நமக்கு உறுதியானது. அவர்களது .சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு போலியானது; தாங்கள் அதை வெளியிடவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, நியூஸ் 7 செய்தியாளர்கள் தரப்பிலும் கேட்டு உறுதி செய்து கொண்டோம். மேலும், திமுக தரப்பிலும் இதுகுறித்து கேட்டப்போது அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுபோன்று எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் நமக்கு உறுதியானது.
மேலும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவும் இதுகுறித்த விளக்கத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Conclusion:
திமுக தலித் அணி தலைவராக வன்னியரசு நியமிக்கப்பட்டுள்ளார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
News 7 Tamil: https://www.facebook.com/news7tamil/photos/5027404317321736
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)