தாய் மற்றும் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தந்தை பெரியார் கூறியதாக கருத்து ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

திராவிடக் கழகத்தின் முன்னோடியான தந்தை பெரியார், பெண்களின் முன்னேற்றத்திற்காக பெரிதும் பாடுபட்டவர்.
பெண் விடுதலை, பெண்கள் மீதான வன்கொடுமை, மதசார்ப்பற்ற தன்மை என்று பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தவை பெரியாரின் கருத்துகள்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் சார்ந்த பாலியல் சார்ந்த புகார்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், பெண்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக இருந்த தந்தை பெரியார் பெற்ற தாய் மற்றும் மகள் குறித்து, “காமத்தை அடக்க முடியவில்லை என்றால், அதை உன் தாயிடமோ இல்லை தங்கையிடமோ தீர்த்து கொள். அவர்களும் பெண்கள் தான் உன் திருப்தியே உனக்கு முக்கியம்” என்று கடந்த 1953 ஆம் ஆண்டே 11.05 தேதியிட்ட விடுதலை நாளிதழில் சர்ச்சைக்குரிய வகையில் கூறியதாகக் கருத்துப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் பீர் குடிப்பதாகப் பரப்பப்படும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification:
தாய் மற்றும் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றினை தந்தை பெரியார் கூறியிருப்பதாகப் பரவுகின்ற புகைப்படக் கருத்து குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட அந்த கருத்தினைப் பெரியார் சொன்னதாகப் பதிவுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே வைரலாகப் பரப்பப்பட்டு வருவது நமக்கு உறுதியானது.
தொடர்ந்து, 2017ம் ஆண்டு இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியபோதே 11.05.1953 ஆம் ஆண்டு வெளியான விடுதலை நாளிதழின் பக்கங்களையே ஆதாரமாகப் பகிர்ந்து குறிப்பிட்ட வைரல் பதிவு போலியானது என்பதை தகர்த்திருந்தனர் என்பதும் நமக்குத் தெரிய வந்தது.



மேலும், “தாக்கத் தாக்கத் தழைப்பவர் பெரியார்” என்கிற தலைப்பில் விடுதலை நாளிதழில் வெளியாகிய கட்டுரை ஒன்றில் போலியாக இந்த அவதூறு கருத்து பெரியார் கூறியதாகப் பரப்பப்பட்டு வருகிறது என்கிற விளக்கம் இடம்பெற்றிருக்கிறது.

Conclusion:
தாய் மற்றும் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றினை தந்தை பெரியார் கூறியிருப்பதாகப் பரவுகின்ற புகைப்படத் தகவல் போலியானது; சித்தரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)