மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய மத்திய அரசு அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இத்தகவல் உண்மையானதா என்பதை உறுதி செய்ய மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான gstcouncil.gov.in-இன் அண்மையில் நடந்து முடிந்த 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை ஆய்வு செய்தோம்.
இதில் பேனா மை, எல்இடி பல்புகள், சோலார் வாட்டர் ஹீட்டர்கள் போன்றவற்றிற்கு விதிக்கப்படும் வரிகள் உயர்த்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் மின் மயானத்தில் உடல் தகனம் செய்ய வரிவிதிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து ஆனந்த விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், ஆனந்த விகடன் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என உறுதி செய்ய, அதன் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.
இதில் ஆனந்த விகடன் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. ஆகவே இதனைத் தொடர்ந்து விகடனின் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஐ.பிரிட்டோவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்ததில், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை” என்று பதிலளித்தார்.
Also Read: ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்றாரா அண்ணாமலை?
Conclusion
மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False
Sources
Press Release from gstcouncil.gov.in, released on 29/06/2022
Phone conversation with I.Britto, Vikatan, on 08/07/2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)