பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இப்படத்தை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Factcheck / Verification
பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
நம் ஆய்வில் வைரலாகும் படத்திலுள்ள மது பாட்டில்கள் மிர்ரர் இமேஜாக (Mirror Image) இருப்பதை காண முடிந்தது. அதாவது வலது பக்கம் இடது புறத்திலும், இடது பக்கம் வலது புறத்திலும் மாறி இருப்பதை காண முடிந்தது. அதேபோல் தட்டுகளில் இறைச்சி இருப்பதுபோல் எடிட் செய்யப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் இப்படத்தில் காணப்படும் பாஜக நிர்வாகிகளுள் ஒருவரான செல்வக்குமார் என்பவர், ‘இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற ஆய்வு கூட்டத்திற்கு வந்த மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகன் அவர்களும், மாவட்ட தலைவர் @balaji_utham, மற்ற மாவட்ட மண்டல நிர்வாகிகள் எங்கள் வீட்டில் மதிய உணவு எடுத்து கொண்ட பொழுது’ என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
செல்வக்குமார் பகிர்ந்த படத்தில் மதுபாட்டில்களோ, இறைச்சியோ இடம்பெறவில்லை. அதில் மினரல் வாட்டர் பாட்டில்களும், சைவ உணவுமே இடம்பெற்றுள்ளது. இப்படத்தை எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: Fact Check: பிரபாகரன் இறந்த இடத்திலிருந்த மண்ணை எடுத்து வைத்துள்ளேன் என்றாரா சீமான்?
Conclusion
பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Sources
Tweet from @Selvakumar_IN dated, February 27, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)