சனிக்கிழமை, மார்ச் 2, 2024
சனிக்கிழமை, மார்ச் 2, 2024

HomeTamilதிமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரப்பப்படும் பழைய படம்!

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரப்பப்படும் பழைய படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரவும் புகைப்படம்

இப்படத்தை அஇஅதிமுகவை சார்ந்த முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரவும் புகைப்படம் -01
Screenshot from Twitter @IInbadurai
திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரவும் புகைப்படம் -02
Screenshot from Facebook / கோவை சுந்தர்
திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரவும் புகைப்படம் -03
Screenshot from Facebook / Pasarai Sagadevan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக இடம் பிடித்துள்ளதா இந்திய ரூபாய்? உண்மை என்ன?

Fact Check/Verification

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த உண்மையை அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலானது தமிழ்பிராமின்ஸ் எனும் இணையத்தளத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. இத்தளத்தில் ஜனவரி 22, 2018 அன்று Tamil Nadu Govt. increased the Bus Fair because NO MONEY to provide Even Foot -Board.. !! என்று தலைப்பிட்டு வைரலாகும் படத்தை பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரவும் புகைப்படம் -04
Sceengrab from Tamilbrahmins.com

அதேபோல் குமுதம் ஃபேஸ்புக் பக்கத்திலும் ஜனவரி 25, 2018 அன்று இப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

இப்படம் எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான எந்த தகவலும் நமது தேடலில் கிடைக்கவில்லை. ஆனால் இப்படம் 2018 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரோ எடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. அக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது திமுக அல்ல, அஇஅதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்து பண்டிட் ஒருவர் 62 வயதில் தனது சொந்த மகளைத் திருமணம் செய்ததாகப் பரவும் வதந்தி!

Conclusion

திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரப்பப்படும் படம் 5 வருடங்களுக்கு முந்திய பழைய படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Article from Tamilbrahmins.com dated January 22, 2018
Facebook post from Kumudam dated January 25, 2018

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular