குஜராத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குஜராத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் குஜராத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. வைரலாகும் வீடியோவில் பூத் ஏஜெண்ட் ஒருவர் வாக்காளர்களை ஓட்டு போட விடாமல் தடுத்து, அவர்களது ஓட்டுகளை அவரே பதிவு செய்கின்றார். வாக்குச் சாவடி அதிகாரி இதை கண்டும் காணாதததுபோல் அமர்ந்திருக்கின்றார்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமநாதபுரத்தில் சித்தர் பறந்ததாக பரவும் வீடியோவின் உண்மை என்ன?
Fact Check/Verification
குஜராத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் வீடியோவில் கள்ள ஓட்டு போடும் நபர் பெங்காலி மொழியில் பேசுவதை கேட்க முடிந்தது. குஜராத்தில் அதிகப்படியாக பேசும் மொழி குஜராத்தி மற்றும் இந்தி ஆகும். ஆனால் அந்நபர் பெங்காலியில் பேசியது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஆகவே வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடலை தொடங்கினோம். இத்தேடலானது டிவி 9 பங்கலா லைவ் எனும் யூடியூப் சேனலில் பிப்ரவரி 27, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்த வீடியோவுக்கு நம்மை அழைத்து சென்றது. அதில் மேற்கு வங்காள முனிசிபல் தேர்தலில் வார்ட் எண் 33-இல் ஏஜெண்ட் வாக்காளர்களை தடுத்து அவரே ஈவிஎம் மெஷினில் ஓட்டு போட்டார் என்று குறிப்பிட்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
தொடர்ந்து தேடியதில் மேற்கு வங்கத்தின் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இதே வீடியோவை அவர்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து திருணாமுல் காங்கிரஸை குற்றம் சாட்டி இருந்ததை காண முடிந்தது.


நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் வைராலாகும் வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது அல்ல, அது மேற்கு வங்காளத்தில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
Also Read: மோர்பி பாலத்தை பிரதமர் பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதா?
Conclusion
குஜராத் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தவறானது என்பதும், உண்மையில் இந்நிகழ்வு மேற்கு வங்காளத்தில் நடந்தது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக உறுதியாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)
Result: False
Sources
Youtube video, TV9BanglaLive, February 27, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)