ராமநாதபுரத்தில் சித்தர் பறந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.
அந்த வீடியோவின் கீழ்,
இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் உள்ள புயல் காப்பகத்தில் 27.11.2.22 அன்று இரவு காவலர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் எடுத்த வீடியோ. சித்தர் பறந்து வ௫வதை பா௫ங்கள்
என குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் தொடர்ந்து தேடியதில் சமூக வலைத்தளங்களில் பலரும் இத்தகவலை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ராமநாதபுரத்தில் சித்தர் பறந்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மையையை அறிய, அவ்வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் வீடியோ உண்மையான வீடியோ அல்ல, அது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.
Joseph Njovu visuals எனும் யூடியூப் தளத்தில் Witch caught on Camera (கேமராவில் சிக்கிய சூனியக்காரி) என தலைப்பிட்டு இந்த வீடியோ ஆகஸ்ட் 27, 2022 அன்று பதிவிடப்பட்டுள்ளது. இதில் எவ்வாறு கிராஃபிக்ஸ் மூலம் இவ்வீடியோ உருவாக்கப்பப்பட்டது என்பது குறித்தும் விளக்கப்பட்டிருந்தது.
இதன்பின் செப்டம்பர் 24, 2022 அன்று வைரலாகும் வீடியோவின் டுட்டோரியல் வீடியோவும் இந்த யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Conclusion
ராமநாதபுரத்தில் சித்தர் பறந்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ உண்மையில் ஒரு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வீடியோவாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
YouTube video, from Joseph Njovu visuals, uploaded on Aug 27, 2022
YouTube video, from Joseph Njovu visuals, uploaded on Sep 24, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)