சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை வழங்குன்றதா FIFA?

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை வழங்குன்றதா FIFA?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை FIFA வழங்குவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு தகவல் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.

 அதில் ‘FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. நான் என்னுடையதைப் பெற்றேன். இதைத் திறக்கவும்’ என்று குறிப்பிட்டு லிங்க் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது.

Source: WhatsApp Bot

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 1616 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதா?

Fact Check/Verification

ஒன்று இணைக்கப்பட்டிருந்தது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை FIFA வழங்குவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக வைரலாகும் தகவலில் இணைக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்தோம். அது மற்றொரு  இணைய பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. அது FIFA-வின் அதிகாரப்பூர்வ பக்கமோ அல்லது வேறு அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் பக்கமோ கிடையாது.  அது அடையாளமற்ற இணையத்தள பக்கமாகும்.

இதே லிங்கை சில நிமிடங்கள் கழித்து கிளிக் செய்கையில் வேறு ஒரு இணைய முகவரிக்கு அழைத்து சென்றது. மறுபடியும் இதே போன்று செய்கையில் மீண்டும் மற்றொரு முகவரிக்கு அழைத்து சென்றது. ஆனால் அனைத்து பக்கத்திலும் காணப்பட்ட விஷயம் ஒன்றாகவே இருந்தது.

முதலில் மொபைல் எண் கேட்கப்பட்டது.  எண்ணை கொடுத்தப்பின்,

வாழ்த்துகள்! 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் இலவச 50ஜிபி டேட்டாவைப் பெற உங்கள் எண் தகுதியானது! உங்கள் இலவச 50ஜிபி டேட்டாவைப் பெற, முதலில் “WHATSAPP” என்ற பச்சைப் பட்டனைக் கிளிக் செய்து, இந்தத் தகவலை வாட்ஸ்அப்பில் உள்ள 12 நண்பர்கள் அல்லது குழுக்களுடன் பகிரவும்! ஒன்றாக கொண்டாடுவோம். உங்கள் அன்புக்குரியவர்களையும் பயன்பெற அழைக்கவும். செய்தியை அனுப்பிய பிறகு, 5 நிமிடங்களுக்குள் உங்கள் மொபைலில் 50ஜிபி தரவை இலவசமாகப் பெறுவீர்கள்.

என்ற தகவலே அனைத்து பக்கங்களிலும் வந்தது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை FIFA வழங்குவதாக பரவும் தகவல்

தொடர்ந்து தேடுகையில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், இதுப்போன்ற செய்திகளால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் என்று திருநெல்வேலி போலீசார் அவர்களது சமூக ஊடகப் பக்கங்களில் எச்சரித்திருந்ததை நம்மால் காண முடிந்தது

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட போலீசாரும் எச்சரித்துள்ளனர்.

இதனடிப்படையில் காண்கையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை FIFA வழங்குவதாக பரவும் தகவல் முற்றிலும் தவறான தகவல் என்பதும், இது ஒரு ஏமாற்று வேலை என்பதும் தெளிவாகின்றது.

Also Read: ‘உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதா?  

Conclusion

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை FIFA வழங்குவதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Facebook post, from Thirunelveli City Police, on November 23, 2022
Facebook post, from Dindigul District Police, on November 23, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular