5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 2.8 லட்சம் கோடி இழப்பு என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டதாக கூறி செய்தித்தாளின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: காவிரி ஆற்றங்கரையில் கடற்கன்னி காணப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 2.8 லட்சம் கோடி இழப்பு என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டதாக கூறி செய்தித்தாளின் புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
நம் ஆய்வில் வைரலாகும் செய்தித்தாளின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது. உண்மையில் “5G spectrum auctions earn Centre record Rs 1.5 lakh crore “ எனும் தலைப்பிலேயே டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது 5ஜி அலைக்கற்றையின் வாயிலாக மத்திய அரசு 1.5 இலட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவே டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இணையத்தளத்திலும் வெளிவந்துள்ளது.

இச்செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதியவரும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆசிரியருமான பங்கஜ் தோவால் கடந்த செவ்வாயன்று (ஆகஸ்ட் 2) உண்மையான செய்தித்தாளின் பக்கத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
வாசகர்களின் தெளிவிற்காக உண்மையான செய்தித்தாளையும் எடிட் செய்யப்பட்ட செய்தித்தாளையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: 1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதா?
Conclusion
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 2.8 லட்சம் கோடி இழப்பு என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டதாக கூறி வைரலாகும் செய்தித்தாளின் படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியிலும் பிரசுரமாகியுள்ளது)
Result: Altered Image
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)