திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkநம் நாட்டில் நிகழ்ந்ததாகப் பரவும் பாகிஸ்தான் நாட்டின் வீடியோ

நம் நாட்டில் நிகழ்ந்ததாகப் பரவும் பாகிஸ்தான் நாட்டின் வீடியோ

உரிமைகோரல்

நெஞ்சம் பதறுகிறது ,நாம் எப்படிப் பட்டவர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இறைவா என் தேசத்தைக் காப்பாற்று.

நடு நிலை பேசும் நண்பர்கள் இசுலாமிய நண்பர்கள் இது போன்ற சம்பவங்களைக் கண்டிக்காதது வருத்தம் அளிக்கிறது.

திருந்துங்கள் திருத்துங்கள்… இல்லையெனில் பொதுஜன விரோதிகள் ஆவீர்கள்… 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரலாக பரவியது

சரிபார்ப்பு

சிசிடிவி  காட்சியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் அங்கு விளையாடிக் கொண்டு இருந்த பெண் குழந்தைகளிடம் எச்சில் தொட்டு பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது .

பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் நபரின் வீடியோ இந்திய அளவில் பரப்பப் படுவதோடு மதம் சார்ந்த கருத்துக்களுடன் பகிர்ந்து வருகின்றனர் .நியூஸ்செக்கரில் இதன் உண்மைத் தன்மையை அறியுமாறு எங்களுக்குச் செய்தி வந்தது.

உண்மை சோதனை

இந்த சம்பவம் எங்கு நடந்திருக்கும் எனத் தேடுகையில் , இந்த சிசிடிவி காட்சிகள் இந்தியாவில் நிகழ்ந்தது அல்ல என்று அறிய முடிந்தது .இது பாகிஸ்தான் நாட்டில் நடந்தது என்றும் மற்றும் அந்த நபர் பஞ்சாப் மாகாண போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை வெளியிட்டுள்ளனர் .”கைது செய்யப்பட்ட குற்றவாளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் டிஜி கான் நகரில் பெண் குழந்தையிடம் தவறாக நடந்தது கொண்டவனின் சிசிடிவி வீடியோ காட்சி வைரலாகிய பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ,அந்த நபரை கைது செய்து சிறையில் இருக்கும் புகைப்படத்தைப்  பஞ்சாப் மாகாண போலீஸ் வெளியிட்டு உள்ளது. 

https://twitter.com/FkLeghari/status/1252513992242855937

முடிவுரை

நியூஸ்செக்கரின் ஆராய்ச்சியின் பின்னர் , இந்த நிகழ்வு இந்தியாவில் நடக்கவில்லை ,  பாகிஸ்தானில் நிகழ்ந்த சம்பவம் என்று தெரியவந்து உள்ளது.3 முதல் 6 வயது சிறுமிகளுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார், அவர்கள் துணிகளில் துப்பவில்லை. கூற்று தவறானது என்பதை நிரூபிக்கிறது.

Sources

  • Google Search
  • Facebook
  • Reverse image search 
  • Twitter 

Result: False 

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)

Most Popular