செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024

HomeFact Checkசனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றாரா அண்ணாமலை?

சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் – அண்ணாமலை

Fact: இத்தகவல் பொய்யானது என்று பாஜக தரப்பு மறுத்துள்ளது.

அண்மையில் சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசுகையில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல், சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.

உதயநிதியின் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான இந்துக்கள் மட்டும் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும்; சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

X Link | Archived Link

சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது கதிர் நியூஸின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து கதிர் நியூஸின் ஆசிரியர் பிரதீப்பை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்ததில், அந்த நியூஸ்கார்டு போலியானது என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில் அத்தகவல் பொய்யானது என்று அவர் தெளிவு செய்தார்.

Also Read: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!

Conclusion

சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with SG Suryah, State Secretary, BJP
Phone Conversation with Pradeep, Kathir News

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular