சனிக்கிழமை, மே 18, 2024
சனிக்கிழமை, மே 18, 2024

HomeFact Checkமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டையில் பிரதமர் மோடியின் புகைப்படமா?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டையில் பிரதமர் மோடியின் புகைப்படமா?

உரிமைகோரல்:

தமிழகத்தில் அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்யும் இவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர்? ???

சரிபார்ப்பு :

பொதுவாக அதிமுக கட்சியில் இருக்கும் அனைத்து  உறுப்பினர்களும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் புகைப்படங்களை வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்று . அனால் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளதாக  சமூக வலை தளங்கல் மற்றும் வாட்ஸாப்பில் இந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வந்தது .

இதன் உண்மைத் தன்மையை  நியூஸ்செக்கரில் கண்டறியத் தொடங்கினோம்

Ahamed Jaleel

தமிழகத்தில் அம்மாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் இவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? ????

உண்மை சோதனை :

இந்த புகைப்படத்தைக் கூகிளில் தேடியபோது ,இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு பிரதமர் மோடி ஓகி புயலில் பாதிப்பு அடைந்த இடங்களைப் பார்வையிட வந்த போது  எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது  .

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்திற்குப் பதிலாக பிரதமர் மோடி அவர்களின் புகைப்படம் “மார்பிங் ” செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டறிந்தோம்.

Youth arrested for morphing CM Palaniswami’s photograph

A 28-year-old man has been arrested for morphing the photograph of Tamil Nadu CM Edappadi K Palaniswami and posting it on social media. The youth allegedly f…

இதை பற்றி மேலும் தேடுகையில்  இந்த புகைப்படம்  2017ம் ஆண்டு  வைரல் ஆக்கப்பட்டு  கன்னியாகுமரியின் காவல்நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டு இருந்துள்ளது  . பின்பு போலீசாரால் அலெக்சாண்டர் என்பவர்  கைது செய்யப்பட்டு , அவர் தான் இந்த மரபிங் புகைப்படத்திற்குக் காரணம் என்று “டைம்ஸ் ஆப்  இந்தியா ” பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது .

முடிவுரை :

2017ம் ஆண்டு  மரபிங் செய்யப்பட்ட  இந்த புகைப்படம் மீண்டும்  சமூக வலைத்தளங்களில்  வைரலாக பகிரப்பட்டு வருகிறது .அரசியல் மற்றும் தவறான செய்திகள் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடும்  என்பதை மனதில் நாம் வைத்துக் கொள்ள வேண்டும் .

Sources

• Google Search
• Facebook
• Reverse image search

Result: False

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular