வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeCoronavirusதமிழகத்திற்கு மட்டும் நிதி அளிக்கவில்லையா லலிதா ஜூவல்லரி உரிமையாளர்? உண்மை என்ன

தமிழகத்திற்கு மட்டும் நிதி அளிக்கவில்லையா லலிதா ஜூவல்லரி உரிமையாளர்? உண்மை என்ன

உரிமைக்கோரல்

லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ரெட்டி பிறந்து வளர்ந்தது ஆந்திர மாநிலம் நெல்லூர். பிழைக்க வந்தது தான் சென்னை. சாதாரண நடுத்தரக் குடும்பம் ஆனால் இன்று தென்னிந்தியாவில் 15 கடைகள் பல்லாயிரம் கோடிச் சொத்துக்கள். கொரானா நிவாரண நிதியாகத் தலா ஒருகோடி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு. ஆனால் தமிழகத்திற்கு ஒன்றுமில்லை. இதுதான் தமிழ்நாட்டு நிதர்சனம். இது போலவே தமிழகத்தில் பிழைப்பு நடத்த வந்த கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், குஜராத்திகள், ராஜஸ்தானிகள் என அவரவர் மாநிலங்களுக்கேத் தமிழகப் பணத்தைக் கொண்டு பண உதவிகள் மூலம் நலம் செய்வர். தமிழர்கள் விழிப்பாக இருந்து அயலவருக்கு வணிகத்தில் லாபத்தை அள்ளிகொடுக்காமல் இருப்பது மாநில வளர்ச்சிக்கு நன்மையே…. 

சரிபார்ப்பு

லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் தன் கடையின் விளம்பரத்தில் தானேத் தோன்றி மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். மேலும், கடந்த ஆண்டில் லலிதா ஜுவல்லரியின் திருச்சிக் கிளையில் கோடிக்கணக்கில் நகைக்கொள்ளை அடிக்கப்பட்ட போது உரிமையாளர் கிரண்குமார் தொடர்பான வதந்திகளும் பரவின.

https://www.facebook.com/photo/?fbid=1784706278332565&set=a.166682786801597

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தின் முதல்வர்களிடம் தலா 1 கோடி அளித்து உள்ளார். ஆனால், தமிழகத்தில் பலக் கிளைகளை நிறுவி இருக்கும் கிரண்குமார் தமிழக நிவாரண நிதிக்கு மட்டும் பங்களிக்கவில்லை என்றொருத் தகவல்ச் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. 

உண்மைத் தன்மை

லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கொரோனவிற்கு நிவாரண நிதி வழங்கியது தொடர்பாகத் தேடுகையில் ஆந்திரா மற்றும்  தமிழ்நாடு இரண்டிற்கும் நிதி வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பாக  Uniindia, telungu samayam மற்றும் telanganatoday ஆகியச் செய்தி இணையதளங்களில் வெளியானச் செய்தி கிடைத்தது.

அணைத்து இணையதளச் செய்திகளிலும் “பிரபல நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி அளித்துள்ளார். அந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.கிரண் குமார் ஒரு கோடிக்கானக் காசோலையைப் பிரகதி பவனில் முதல்வரிடம் ஒப்படைத்தார். மேலும், அவர் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கும் தலா 1 கோடி ரூபாய் அளித்துள்ளார் ” என வெளியாகி இருக்கிறது”

https://www.uniindia.com/covid-19-sccl-donates-rs-40-cr-to-govt/south/news/1984309.html
https://www.lalithaajewellery.com/wp-content/uploads/2020/05/donate-001.jpg

லலிதா ஜுவல்லரி இணையதளத்திலும்  திரு. கிரண்குமார் அவர்கள் 3 கோடி ரூபாய்  நிதியுதவியை ஆந்திரா ,தெலுங்கானா மற்றும் தமிழ் நாட்டுக்கு வழங்கியதாக வெளியிடப்பட்டு உள்ளது .Uniindia செய்தித் தளத்திற்கு கிரண்குமார் அளித்த தகவலில், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்குத் தலா ஒரு கோடி ரூபாய் அளித்து உள்ளதைக் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது.

முடிவுரை

எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண்குமார் கொரோனாத் தடுப்பு நிவாரண நிதியை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்திற்கு மட்டும் அளித்துள்ளார், தமிழகத்திற்கு அளிக்கவில்லை எனப் பரவும் தகவல் தவறானது. அவர் தமிழகத்திற்கும் நிவாரண நிதி அளித்துள்ளார் எனத் தெரியவந்து உள்ளது .

Sources

  • Google Search
  • Twitter 
  • News Channel
  • Website 

Result: FALSE

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular