திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

HomeFact CheckFact Check: கணவருக்காக மனைவி கட்டிய குஜராத் ராணி-கி-வாவ் என்று பரவும் ராஜஸ்தான் ரணக்பூர் ஜெயின்...

Fact Check: கணவருக்காக மனைவி கட்டிய குஜராத் ராணி-கி-வாவ் என்று பரவும் ராஜஸ்தான் ரணக்பூர் ஜெயின் கோவில் புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
கணவருக்காக மனைவி கட்டிய குஜராத்தின் ராணி-கி-வாவ் புகைப்படம்

Fact
வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் உண்மையில் ரணக்பூர் சமணர் கோவிலைச் சேர்ந்ததாகும்.

கணவருக்காக மனைவி கட்டிய குஜராத்தின் ராணி-கி-வாவ் (ராணியின் படிக்கிணறு) என்பதாகப் புகைப்படம் ஒன்று, பதிவு ஒன்றுடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

ராணி உதயமதி கட்டிய ராணியின் படிக்கிணறு பற்றிய தகவல் பதிவுடன் புகைப்படம் ஒன்று பரவுகிறது.

Screenshot from Facebook/street.cat.77
Screenshot from Facebook/Kongu Vetriselvi Manickamcvs

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தாய்லாந்தில் ‘ஓம்’ என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரத்தில் பறக்கும் நீருற்று; வைரலாலும் வீடியோவின் உண்மை என்ன?

Fact Check/Verification

கணவருக்காக மனைவி கட்டிய குஜராத்தின் ராணி-கி-வாவ் என்று பகிரப்படும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் பதிவில் உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், ராணி-கி-வாவ் குறித்த பகிர்வில் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் ராஜஸ்தானின் ரணக்பூர் சமணர் கோவிலைச் சேர்ந்தது என்பது நமக்குத் தெரிய வந்தது. ராஜஸ்தான் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள ரணக்பூர் சமணர் கோவில் குறித்த வீடியோவில், வைரலாகும் ராணி-கி-வாவ் பதிவில் இடம்பெற்றுள்ள தூண்கள் தெளிவாக இடம்பெற்றுள்ளன.

மேலும், Alamy பக்கத்தில் ரணக்பூர் ஜெயின் கோவில் என்கிற தலைப்பில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் தூண்கள் அமைந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து, குறிப்பிட்ட ராணி-கி-வாவ் குறித்த வைரல் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் குறித்து மேலும் ஆராய்ந்தபோது, Lost Temples என்கிற ட்விட்டர் பக்கத்தில் அப்புகைப்படம் “ரணக்பூர் கோவில்” என்கிற பதிவுடன் இடம்பெற்றிருந்தது. மேலும், அப்புகைப்படத்தை எடுத்தவர் பெயர் Milica_grujic_ sir என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

புகைப்படக்கலைஞரான Milica Grujic பல நாடுகளுக்கு பயணம் செய்து கட்டிடக்கலை சிறப்புகளை அழகாக படம்பிடித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரியில் இப்புகைப்படத்தை “Jain Temple, Ranakpur, India” என்கிற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

Instagram will load in the frontend.

மேலும், ராணி-கி-வாவ் யுனெஸ்கோவால் அங்கீகரிப்பட்ட நிலையில், UNESCO பக்கத்தில் குஜராத்தின் ராணியின் படிக்கிணறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

Rajasthan Tourism பக்கத்தில் ராஜஸ்தானின் ஆரவல்லி மலைப்பகுதியின் பாலி மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதே நேரம், ராணி-கி-வாவ், அதாவது ராணியின் படிக்கிணறு சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த ராணி உதயமதி, அவருடைய கணவர் பீம்தேவ் நினைவாக கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கிய நினைவுச்சின்னம் என்று Gujarat Tourism பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Also Read: இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ!

Conclusion

கணவருக்காக மனைவி கட்டிய குஜராத்தின் ராணி-கி-வாவ் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையில் ராஜஸ்தான் ரணக்பூர் ஜெயின் கோவில் என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Instagram Post From, Milica Grujic, Dated February 2020
YouTube Video From, Rajasthan Tourism
Twitter Post From, Lost Temples, Dated May 12, 2020
Alamy
Rajasthan Tourism
Gujrat Tourism
UNESCO





உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular