சனிக்கிழமை, மே 25, 2024
சனிக்கிழமை, மே 25, 2024

HomeFact Checkமும்தாஜின் உண்மையான படங்கள் என்று பரவும் தவறான படங்கள்!

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று பரவும் தவறான படங்கள்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மும்தாஜின் உண்மையான படங்கள் என்று பரவும் படங்கள்.

Fact: வைரலாகும் படத்திலிருப்பவர்கள் மும்தாஜ் அல்ல. போபாலை ஆண்ட ராணிகளாவர்.  

முகலாய மன்னர்களுள் ஒருவரான ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் உண்மையான புகைப்படம் என கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று வைரலாகும் படங்கள்

X Link | Archive Link

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று வைரலாகும் படங்கள்

Archive Link

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று வைரலாகும் படங்கள்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்றாரா இயக்குநர் தங்கர்பச்சான்?

Fact Check/Verification

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று வைரலாகும் படங்களின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரலாகும் படங்களில் இருப்பவர்கள் மும்தாஜ் அல்ல. போபாலை ஆண்ட ராணிகள் என அறிய முடிந்தது.

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான indianculture.gov.in-ல் Begums of Bhopal: 107 Years of Golden Reign” என்று தலைப்பிட்டு 1819 முதல் 1926 வரை போபால் மாகாணத்தை ஆண்ட நான்கு ராணிகள் குறித்த தகவல்களை வெளியிட்டிருந்ததை காண முடிந்ததது.  அந்த நான்கு ராணிகளில் முன்றாவது ராணியும், நான்காவது ராணியுமே வைரலாகும் படத்திலிருப்பர்களாவர்.

வைரலாகும் படங்களில் இளமையான தோற்றத்திலிருப்பவர் மூன்றாவது ராணி ஷா ஜஹான் பேகமாவார்.

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று வைரலாகும் படங்கள்

முதிர்ந்த தோற்றத்திலிருப்பவர் நான்காவது ராணி சுல்தான் ஜஹான் பேகமாவார்.

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று வைரலாகும் படங்கள்

தொடர்ந்து இவ்விருவர்கள் குறித்து தேடுகையில் இங்கிலாந்தின் ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் இணையத்தளத்தில் இவ்விரு ராணிகள் குறித்த தகவல் புகைப்படங்களுடன் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. ஷா ஜஹான் பேகம் 1838லிருந்து 1901 வரை வாழ்ந்ததாகவும், சுல்தான் ஜஹான் பேகம் 1858லிருந்து 1930 வரை வாழ்ந்ததாகவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் குறித்து தேடுகையில் தாஜ்மகால் குறித்த அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.tajmahal.gov.in/-ல் மும்தாஜ் 17 ஜூன் 1631-ல்z உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று வைரலாகும் படங்கள்

ஆனால் உலகின் முதல் புகைப்பட கேமரா 1816 ஆம் ஆண்டே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  அதாவது மும்தாஜ் இறந்து 175 ஆண்டுகளுக்கு பிறகே முதல் கேமரா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே மும்தாஜ் வாழ்ந்த காலத்தில் கேமரா என்பது கண்டுப்பிடிக்கவே இல்லை என அறிய முடிகின்றது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் படங்களில் இருப்பவர்கள் மும்தாஜ் அல்ல.
  2. வைரலாகும் படங்களில் இருப்பவர்கள் ஒருவரல்ல, இருவராவர்.
  3. அவ்விருவரும் போபாலை ஆண்ட ராணிகளாவர்.  ஒருவர் ஷா ஜஹான் பேகம், மற்றொருவர் சுல்தான் ஜஹான் பேகம்.
  4. உலகின் முதல் புகைப்பட கேமரா கண்டுபிடிக்கப்பட்டது 1816 ஆம் ஆண்டிலேயாகும். ஆனால் மும்தாஜ் இதற்கு 175 ஆண்டுகளுக்கு முன் 1631 ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார்.

 Also Read: நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

மும்தாஜின் உண்மையான படங்கள் என்று வைரலாகும் படங்கள் தவறானவையாகும். உண்மையில் அப்படங்களில் இருப்பவர்கள் போபால் மாகாணத்தை ஆண்ட ராணிகளாவர். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
indianculture.gov.in
Shah Jahan Begum
images from Royal Collection Trust
Sultan Jahan Begum images from Royal Collection Trust
tajmahal.gov.in

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular