திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkகோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்றாரா கமல்ஹாசன்?

கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்றாரா கமல்ஹாசன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கமல்ஹாசன் கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்று குறிப்பிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கோட்சேவை குறித்து கமல்ஹாசன் பேசியதாக பரவும் பதிவு.
Source: Facebook

Fact Check/Verification

நடிகர்களுள் சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் என்றால் அது கமல்ஹாசன் அவர்கள்தான். கடந்த 30 ஆண்டுகளில் அவர் நடித்து எந்த வித சர்ச்சையையும் பிரச்சனையையும் சந்திக்காமல் வெளிவந்த திரைப்படங்கள் மிகவும் குறைவு.

தன்னை ஒரு கடவுள் மறுப்பாளராகவும், பகுத்தறிவாதியாகவும் கமல்ஹாசன் காட்டிக் கொண்டாலும் அவர் மீது சாதி சாயம் பூசும் நடவடிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.

அதுவும் அவர் முழுநேர அரசியலில் காலடி வைத்தப்பின் சாதிய ரீதியான தாக்குதல்களும் புகார்களும் அவர்மேல் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது.

தற்போது கமல்ஹாசன் காந்தியடிகளை கொன்ற இந்தியாவின் முதல் தீவிரவாதியாக கருதப்படும் கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்று குறிப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

https://www.facebook.com/andy.n.robert/posts/4284639404896362

Aechive Link: https://archive.vn/eU0Wo

https://www.facebook.com/muhammad.mohideen.1/posts/2023413334466935

Aechive Link: https://archive.vn/eU0Wo

https://www.facebook.com/shahul.asfika/posts/1797983917039467

Aechive Link: https://archive.vn/cWpfx

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தனமை குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

கமல்ஹாசன் கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்று குறிப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு செய்தி ஊடகங்களில் வந்ததா என்பதை முதலில் தேடினோம்.

நம் தேடலில் தினகரன் உள்ளிட்ட ஊடகங்களில் இதே தலைப்பிட்டு சென்ற ஆண்டு காந்தியடிகள் நினைவு தினத்தன்று செய்தி  வந்திருந்ததை நம்மால் காண முடிந்தது.

ஆனால் கமல்ஹாசன் உண்மையில் இவ்வாறு கூறினாரா? என்பதை அறிய இதுக்குறித்து  தேடினோம். அவ்வாறு தேடியதில் கமல்ஹாசன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் 30/01/2020 அன்று பதிவிட்டிருந்த பதிவு ஒன்றை நம்மால் காண முடிந்தது.

“The lowest & meanest form of criticism in a reformed world is assasination. One of the most important ambassador of world peace and my personal torchbearer was shot dead by an allegedly patriotic Indian on this day. India remembers Gandhiji so that the history is not repeated. ” என்று அப்பதிவில் பதிவிட்டிருந்தார்.

Source: twitter

இதை தமிழில்  மொழிப்பெயர்த்தால்,

இந்த சீர்த்திருத்தப்பட்ட உலகில் மிகவும் கீழ்த்தரமான மற்றும் மோசமான விமர்சன வடிவம்  படுகொலை.

உலக அமைதிக்கு அடையாளமாய் விளங்குபவர்களில் ஒருவராகவும், எனக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் ஒருவர், இதே தினத்தில் தேசபக்தி கொண்ட இந்தியர் என்று மற்றவரால் கூறப்படப்படும் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வரலாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இந்தியா காந்திஜியை நினைவில் கொள்கிறது.”

என்பதே அர்த்தமாக வரும்.

இதன்படி பார்க்கையில் கமல்ஹாசன் கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்று கூறவில்லை என்பதும், கோட்சேவை மற்றவர்கள் இவ்வாறு அழைக்கிறார்கள் என்பதையே கமல் கூற வருகிறார் என்பதும் தெளிவாகிறது.

ஆகவே தினகரன் உள்ளிட்ட ஊடகங்களில் வந்த செய்தி தவறான ஒன்று என்பது நமக்கு உறுதியாகிறது.

சமூக ஊடகங்களில் ஒன் இந்தியா தமிழில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே இவ்வாறு ஒரு தகவல் பரப்பப்பட்டது.  ஆகவே ஒன் இந்தியாவில் இவ்வாறு ஒரு செய்தி வந்துள்ளதா என்பதை தேடினோம்.

ஆனால் ஒன் இந்தியாவில் “தேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்ளப்படும் இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன்” எனும் தலைப்பிட்டே இந்த செய்தியானது பிரசுரிக்கப்பட்டிருந்தது.

Source: Twitter

Conclusion

கமல்ஹாசன் கோட்சேவை “தேசபக்தி கொண்ட இந்தியர்” என்ற குறிப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவலானது முற்றிலும் தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misplaced Context

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/andy.n.robert/posts/4284639404896362

Facebook Profile: https://www.facebook.com/muhammad.mohideen.1/posts/2023413334466935

Dinakaran: https://twitter.com/dinakaranonline/status/1222779910541864960

Dr.Kamal hassan: https://twitter.com/ikamalhaasan/status/1222771648580861952

One India Tamil: https://twitter.com/thatsTamil/status/1223119515061350401


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular