ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகிரெட்டா தன்பெர்க் மீது வழக்குப் பதிவா?

கிரெட்டா தன்பெர்க் மீது வழக்குப் பதிவா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சூழலியல் ஆர்லர் கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

கிரெட்டா தன்பெர்க் குறித்து வந்தச் செய்தி
Source: Twitter

 Fact Check/Verification

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏறக்குறைய 70 நாட்களாக தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்தியக் குடியரசு தினமான ஜனவரி  26 ஆம் தேதி மாபெரும் டிராக்டர் பேரணி செல்ல விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். அமைதியாக தொடங்கிய இப்பேரணி மிகப்பெரிய கலவரமாக மாறியது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இதன்பின் டெல்லி எல்லைப் பகுதிகளில் இருக்கும் மாவட்டங்களில்  இணைய வசதி துண்டிக்கப்பட்டது. இப்போராட்டத்திலிருந்து விலகி கொள்வதாக இரணடு விவசாய சங்கங்கள் அறிவித்தது. மற்ற சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றது.

இக்கலவரம் காரணமாக இந்திய விவசாயிகளின் இப்போராட்டம் உலக அளவில் கவனிப்புக்கு உள்ளாகியுள்ளது.

 ஸ்வீடனைச் சார்ந்த சூழலியல் ஆர்வலரான கிரெட்டா தன்பெர்க் என்பவர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

வேளாண் போராட்டததை ஆதரித்து கிரெட்டா தன்பெர்க் பதிவு செய்த டிவீட்
Source: Twitter

கிரெட்டா தன்பெர்க்கின் இந்த பதிவுக்கு சச்சின் தெண்டுல்கர், விராத் கோலி, அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

Archive Link: https://archive.vn/4MkeF

Archive Link: https://archive.vn/UVoNl

Archive Link: https://archive.vn/xOBhm

ஊடகங்களில் வந்த இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில்  இச்செய்தி தவறானது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் யாரோ இணையத்தளத்தில் உதவும் கருவி (Tool kit) ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த உதவும் கருவி குறித்து கிரெட்டா தன்பெர்க் டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

உதவும் கருவி குறித்து கிரெட்டா தன்பெர்க் பதிவு செய்த டிவீட்
Source: Twitter

இந்த உதவும் கருவியை பதிவேற்றம் செய்தவர்கள் மீதே டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதில் யாருடைய பெயரும் சேர்க்கப்படவில்லை என்று டெல்லி போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: Twitter

ஆனால் தற்போது இந்த உதவும் கருவி நீக்கப்பட்டுள்ளது. இந்த உதவும் கருவியில் இருந்த விஷயங்கள் குறித்து Scroll.in-யில் செய்தி வந்துள்ளது.

மேலே உள்ள விஷயங்களின்படி பார்க்கையில் கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக ஊடகங்களில்  வந்தச் செய்தி தவறான ஒன்று என்பது தெளிவாகின்றது.

Conclusion

டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சூழலியல் ஆர்லர் கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Manipulated media

Our Sources

News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1357279851690921984

Madhimugam TV: https://twitter.com/MadhimugamTV/status/1357290577872605184

NDTV: https://twitter.com/ndtv/status/1357275067994963970

Greta Thunburg: https://twitter.com/GretaThunberg/status/1357054451769606147

ANI: https://twitter.com/ANI/status/1357311009497653248

Scroll.in: https://scroll.in/article/985946/explainer-what-does-the-greta-thunberg-toolkit-cited-as-a-sign-of-conspiracy-actually-contain


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular