வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஎல்.முருகன் பசுக்களுக்கு உதவித்தொகை வழங்க ஸ்டாலின் தயாரா என்று கேட்டாரா?

எல்.முருகன் பசுக்களுக்கு உதவித்தொகை வழங்க ஸ்டாலின் தயாரா என்று கேட்டாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

எல்.முருகன், தமிழக பாஜக தலைவரான இவர், “குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு பதிலாக இந்துக்களின் தாயான பசுவிற்கு வழங்கத் தயாரா?” என்று மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எல்.முருகன்
Source: Twitter

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைந்து வருகின்ற நிலையில், அரசியல் சதுரங்கங்களும் கூட்டணி காய் நகர்த்தலும் பரபரப்பாக நிகழ்ந்து வருகிறது.

மத்தியில் கோலோச்சும் பாஜக தமிழகத்தில் இம்முறை எப்படியாவது அழுத்தமாக காலூன்றி விட வேண்டும் என்று பிரச்சாரக்களத்தில் மும்முரமாக உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், தனது அதிரடியான அறிவிப்புகளால் மக்களைக் கவரும் வகையிலான பரப்புரைகளில் பிசியாக உள்ளார். அதில் ஒன்றாக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக ரூபாய் 1000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பின் மூலமாக தமிழகம் முழுவதும் இல்லத்தரசிகளின் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறார்.

இந்நிலையில், பாஜக தமிழகத் தலைவரான எல்.முருகன் அவரது இந்த அறிவிப்பினை கேலி செய்து, குடும்பத்தலைவிகளுக்குப் பதிலாக இந்துக்களின் தாயான பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று கேள்வி எழுப்பியது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

Source: Twitter

Archived Link: https://archive.ph/37pcI

Source: Twitter

Archived Link: https://archive.ph/FwJN3

Source: Twitter

Archived Link: https://archive.ph/uNoCL

Source: Twitter

Archived Link: https://archive.ph/xyDpk

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

எல்.முருகன், ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு பதிலாக பசுக்களுக்கு வழங்கத் தயாரா என்று கேட்டதாகப் பரவுகின்ற புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆராய அதனை குறிப்பிட்ட அந்த செய்தி தளத்தில் தேடினோம்.

அதன் முடிவில், நமக்கு அவர்கள் வெளியிட்டுருந்த உண்மையான செய்தியின் நியூஸ் கார்டு கிடைத்தது.

அதில், பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் அவர்கள், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு செய்யாமல் இருப்போம் என ஸ்டாலின் உத்தரவாதம் அளிக்க முடியுமா?” என்கிற செய்தி வெளியான நியூஸ் கார்டினை எடிட் செய்து குறிப்பிட்ட அந்த போலிச்செய்தி வெளியாகியிருப்பது நமக்குத் தெரிய வந்தது.

எல்.முருகன்
Source:Facebook

Archived Link: https://archive.ph/6cnGf

இதனை, குறிப்பிட்ட செய்தி நிறுவன ஊடகத்தினர் மூலமாகவும் உறுதி செய்தி கொண்டோம். மேலும், குறிப்பிட்ட அந்த நில அபகரிப்பு குறித்த எல்.முருகன் அவர்களின் கருத்தினை பாஜக தனது சமூக வலைத்தளப்பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.

எல்.முருகன்
Source: Facebook

Link: https://www.facebook.com/BJP4TamilNadu/photos/a.631042146945785/3629158617134108/?type=3

எல்.முருகன்
Source: Twitter

ஆகவே இதனடிப்படையில் பார்க்கும்போது எல்.முருகன் உரிமைத்தொகை குறித்து கூறியதாக பரவும் தகவல் தவறான ஒன்று என்பது நமக்கு உறுதியாகின்றது.

Conclusion:

பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் உரிமைத் தொகையை குடும்பத் தலைவிகளுக்கு பதிலாக பசுக்களுக்கு வழங்கத் தயாரா என்று கேட்டதாகப் பரவிய புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாகும் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources:

NEWS J: https://www.facebook.com/NewsJTamil/

BJP Tamil Nadu: https://www.facebook.com/BJP4TamilNadu/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular