வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024
வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

HomeFact Checkதேர்தலில் வென்றால் இலவசத் தடுப்பூசியா?

தேர்தலில் வென்றால் இலவசத் தடுப்பூசியா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

“பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவசக் கொரோனா தடுப்பூசித் தருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்” என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலில் வென்றால் இலவசத்  தடுப்பூசி என்று வந்தச் செய்தி

Fact Check/Verification

பீகாரில் வரும் 28 ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெறவிருக்கிறது. இத்தேர்தலானது மூன்று கட்டங்களாக நடைப்பெறவிருக்கிறது.

அவை முறையே, வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 4 ஆகிய மூன்று தேதிகளில் தேர்தல் நடைப்பெறவிருக்கிறது.

இதை முன்னிட்டு அனைத்து தேசிய கட்சிகளும் பீகாரில் கூடாரமிட்டு தங்கள் பலத்தை அம்மாநிலத்தில் நிலைநிறுத்த வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

இந்த வாக்குறுதிகளின் வரிசையில் நிர்மலா சீதாராமன் அவர்கள் அளித்த வாக்குறுதி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “தேர்தலில் தாங்கள் வென்றால் அனைவருக்கும் இலவச  கொரானாத் தடுப்பூசித் தருவோம் “ என்பதே அந்த வாக்குறுதியாகும்.

இதை புதிய தலைமுறை செய்தியாக வெளியிட்டிருந்தது.

Source: Twitter

இச்செய்தியைக் கண்ட நெட்டிசன்கள் பலர் கொதித்தெழுத்து இதற்கெதிராகத் தங்கள் கட்டணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நெட்டிசன்களில் இந்தக் கொந்தளிப்புக்கு காரணம் புதிய தலைமுறையில் வந்த செய்தியேயாகும். ஆனால் உண்மையிலேயே நிர்மலா சீதாராமன் இந்த வாக்குறுதியை அளித்தாரா என்பது இதில் கேள்விக்குறி.

ஆகவே இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மை என்ன?

சமூக வலைத்தளங்களில் கண்டனத்துக்குள்ளான இந்நிகழ்வுக் குறித்து ஆராய்ந்தப்போது, ANI தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தப் பதிவு ஒன்று நம் கண்ணில் பட்டது.

அதில்,

 As soon as #COVID19 vaccine will be available for production at a mass scale, every person in Bihar will get free vaccination. This is the first promise mentioned in our poll manifesto: Union Minister Nirmala Sitharaman at the launch of BJP Manifesto for #BiharPolls

 

என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Courtesy: ANI

இதன் தமிழ் அர்த்தம் என்னவென்றால், “கூடிய விரைவில் கொரானாவுக்கான தடுப்பு மருந்து அதிக அளவில் தயாராகவிருக்கிறது. இதன்பின் பீகாரில் இருக்கும் ஒவ்வொருத்தருக்கும் இலவசமாகவே தடுப்பூசி கிடைக்கும். இதுவே எங்கள் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதி என்று நிர்மலா சீதாராமன் பேசினார்” என்பதேயாகும்.

மேற்கூறப்பட்ட செய்திப்படிப் பார்த்தால், நிர்மலா சீதாராமன் அவர்கள், “தடுப்பூசித் தயாராகியதும் பீகாரில் உள்ள அனைவருக்கும்  இலவசமாகத்  தரப்படும்” என்றே பேசியுள்ளார் என்பது தெளிவாகிறது.

அவ்வாறானால்,  “பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவசக் கொரோனா தடுப்பூசித் தருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் ” என்று புதிய தலைமுறை வெளியிட்டச் செய்தி தவறானது என்பது உறுதியாகிறது.

Conclusion

நம் ஆய்வின் மூலம் தெளிவாகுவது என்னவென்றால், கொரானாவுக்கான தடுப்பு மருந்து தயாராகியதும் பீகாரில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தரப்படும் என்று நிர்மலா சீதாராமன் பேசியதை, தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவசக் கொரோனா தடுப்பூசித் தருவதாகப் பேசினார் என்று புதிய தலைமுறை தவறாக செய்தி வெளியிட்டுள்ளது.

Result: False Headline

Our Sources

Puthiya Thalaimurai: https://twitter.com/PTTVOnlineNews/status/1319153968874803200

ANI: https://twitter.com/ANI/status/1319153697406906369


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular