Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
கமலாலயம் பெயரை கசமுசாலயம் என்று தமிழக பாஜக தலைமை அலுவக கட்டிடத்தின் வெளியில் மாற்றி எழுதியிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் பாஜக கால் ஊன்றிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் தொடர்ந்து அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. எனினும், பாஜகவினர் மீது எழும் தொடர் புகார்கள் அதற்கு முட்டுகட்டையாக அமைந்து வருகின்றன.
பாஜக அலுவலகத்திலேயே பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுவதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபண்ணா தெரிவித்திருந்தார்.
தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தமிழக பாஜக தலைவர்கள் மீது குவிந்துள்ள பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆனால், சி.டி.ரவி அவ்வாறு பேசியதாக வெளியான செய்தி தவறானது என்று தமிழக பாஜக சார்பிலும், சி.டி.ரவி சார்பிலும் குறிப்பிட்ட செய்தியை முதலில் வெளியிட்ட செய்தித்தாள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைமை அலுவலகத்தின் பெயர் கமலாலயம் என்பதில் இருந்து கசமுசாலயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
கமலாலயம், தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான இதன் பெயர் கசமுசாலயம் என்று மாற்றி எழுதப்பட்டதாகப் பரவும் புகைப்படம் குறித்து ஆராய்ந்தோம்.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கமலாலயம் தொடர்பான செய்திகள் அனைத்திலும் குறிப்பிட்ட புகைப்படத்தில் அலுவலக கட்டிடத்தின் வெளியில் கமலாலயம் என்கிற பெயரே இடம்பெற்றுள்ளது.
அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலோ அல்லது சமூக வலைத்தளப்பக்கங்களிலோ இதுபோன்ற பெயர் மாற்றம் எதுவும் பதிவாகவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த பெயர் மற்றும் இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துகள் கேலியாக சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும், கசமுசாலயம் என்கிற வார்த்தைகள் கட்டிடப்புகைப்படத்தில் பொருந்தாமல் தனியாக காட்சியளித்தது.
இதுகுறித்து, தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகனுக்கு நெருக்கமான பாஜகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். அவர் குறிப்பிட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டு, தமிழக பாஜகவின் மரியாதையை களங்கப்படுத்தும் வகையில் பரப்பப்படுவதாக தெரிவித்தார். எல்.முருகனின் தனி உதவியாளர் கவியரசன் என்பவரும் இதனை உறுதிப்படுத்தினார்.
Original Image
Edited Image
Conclusion:
கமலாலயம், தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான இதன் பெயர் கசமுசாலயம் என்று மாற்றி எழுதப்பட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானது; எடிட் செய்யப்பட்டு பாஜகவினரைக் கேலி செய்யும் வகையில் பரப்பப்படுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
BJP Tamil Nadu officials
Facebook: https://www.facebook.com/BJP4TamilNadu/photos/?ref=page_internal
BJP website: https://tamilnadu.bjp.org/
Vikatan: https://www.vikatan.com/government-and-politics/politics/news-about-tamilnadu-bjp-next-leader
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.