வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkசீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றாரா அற்புதம்மாள்?

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றாரா அற்புதம்மாள்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று அற்புதம்மாள் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்

சமீப காலங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய கருத்துகளை பொது வெளியில் பேசி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றார்.

Also Read: சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?

இந்நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று கூறியதாக கூறி இரண்டு வருடங்களுக்கு முந்தைய நியூஸ்கார்ட் ஒன்று தற்போது  சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று அற்புதம்மாள் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று அற்புதம்மாள் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று அற்புதம்மாள் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து உண்மையிலேயே இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணம் குறித்து  சீமான் அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டம் ஒன்றில் பேசி இருந்தார்.

இப்பேச்சுக்கு காங்கிரஸ் உட்பட மாற்றுக் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கட்சிகளின் தலைவர் திருமாவளவன் அவர்களும் இதுக்குறித்து கருத்து தெரிவித்திருந்தார். நியூஸ் 7 தமிழ் அக்கருத்து குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

இச்செய்தியில் பயன்படுத்தப்பட்டிருந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம். அவரும்,

“வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது. இந்த நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை”

என்று நமக்கு விளக்கமளித்தார்.

Also Read: ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா?

Conclusion

சீமானை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று அற்புதம்மாள் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

News 7 Tamil Digital Head’s Testimonial

News 7 Tamil

IBC Tamil


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular