சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkசந்திரயான்-3 வெற்றிக்கு எலான் மஸ்க் வாழ்த்து கூறியதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

சந்திரயான்-3 வெற்றிக்கு எலான் மஸ்க் வாழ்த்து கூறியதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சந்திரயான் – 3 வெற்றிக்கு எலான் மஸ்க் வாழ்த்து

Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

சந்திரயான் – 3 வெற்றிக்கு எலான் மஸ்க் கைகளில் பதாகை தாங்கி வாழ்த்து கூறியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

“All the best india for Chadrayan 3 – Team space X” என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகையை எலான் மஸ்க் கைகளில் பிடித்துள்ளதாக இந்த புகைப்படம் வைரலாகிறது.

சந்திரயான்
Screenshot from Twitter @BhagavaTamilan

Archived Link

Screenshot from Twitter @knusrata

Twitter Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்றாரா அண்ணாமலை?

Fact Check/Verification

சந்திரயான் – 3 வெற்றிக்கு எலான் மஸ்க் வாழ்த்து கூறியதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது DogeDesigner என்கிற கிராபிக் வடிவமைப்பாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்கை மையமாக வைத்து “The Population Crisis is real” என்று அவர் பதாகை ஏந்தியுள்ளதாகப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  குறிப்பிட்ட ட்விட்டர் பக்கமானது X மற்றும் எலான் மஸ்கை ஆதரிக்கும் வகையில் மீம் புகைப்படங்கள், AI புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இப்புகைப்படத்தை எலான் மஸ்க்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மேலும்,

இந்நிலையில், குறிப்பிட்ட புகைப்படமே தற்போது எலான் மஸ்க் சந்திரயான் – 3 வெற்றிக்கு வாழ்த்து கூறியதாக எடிட் செய்து பரவுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Also Read: இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பதாகப் பரவும் வதந்தி!

Conclusion

சந்திரயான் – 3 வெற்றிக்கு எலான் மஸ்க் வாழ்த்து கூறியதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image 

Our Sources
Tweet from DogeDesigner, Dated August 21, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular