Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
ஐந்தாயிரம் ரூபாயில் 2500 கழிந்தால் 1500 என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கணக்கு சொல்லியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களிடையே உரையாற்றியபோது 5000 ரூபாயில் இருந்து 2500 ரூபாய் கழிந்தால் 1500 என்று கணக்கை தவறாக சொல்லியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
அந்த வீடியோ, “பரமாத்த குருவும் அவரது சீடர்களும்….
5000-2500 =1500. நாங்க யாரையும் கேலி செய்யவில்லை. சொன்னதை அப்படியே as it is போடறோம். அவ்வளவுதான்.” என்கிற வாசகங்களுடன் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பள்ளிகளில் இறைவணக்கத்தை தவிர்க்க ஏன் உத்தரவிட்டது தமிழக அரசு?
Fact check/ Verification
ஐந்தாயிரம் ரூபாயில் 2,500 கழிந்தால் 1500 ரூபாய் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட அந்த 19 நொடி வீடியோ கடந்த 2020ம் ஆண்டிலிருந்தே வைரலாகி வருவது நமக்குத் தெரிய வந்தது. அப்போதே, குறிப்பிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆராய்ந்தபோது, குறிப்பிட்ட வீடியோ கடந்த 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் இராணிப்பேட்டை – அனந்தலை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகியது.
குறிப்பிட்ட நிகழ்வின் நேரலையில், ``கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் வாழ்வாதாரமின்றி தவிக்கும் மக்களுக்கு ஆளும் அரசு உடனடியாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டேன்.
ஆனால், 1000 ரூபாய் மட்டுமே அறிவித்தார்கள். தற்போது தேர்தல் காலகட்டம் என்பதால் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் அறிவித்துள்ளார்கள். அதை நான் வரவேற்கிறேன். ஆனால், நான் முதலில் சொன்ன 5000 ரூபாயில் 1000 ரூபாய் கொடுத்தீர்கள். இப்போது 2500 ரூபாய். 5000 இப்போது எவ்ளோ மிச்சம் இருக்கு? 1500 ரூபாயா?” என்று பேசியுள்ளார்.
இதனையே, எடிட் செய்து 5000 ரூபாயில், 2500 ரூபாய் கழிந்தால் 1500 ரூபாய் என்று தவறான கணக்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரப்பி வருகின்றனர் என்பது உறுதியானது.
Conclusion:
ஐந்தாயிரம் ரூபாயில் 2,500 கழிந்தால் 1500 ரூபாய் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Manipulated Media
Our Sources:
CM M.K.Stalin: https://twitter.com/mkstalin/status/1343781712086515713?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.