Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
தமிழ்நாடெங்கும் கோமியப் பந்தல் அமைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
“பாஜகவின் 42 ஆவது ஸ்தாபகத் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடெங்கும் கோமியப் பந்தல் ஏற்படுத்த பாஜக தொண்டர்கள் முன் வரவேண்டும். கோடை வெயிலில் தாகத்தால் தவிக்கும் வாய்களுக்கு ஒரு டம்ளர் கோமியம் ஜில்லென வழங்கி தாகம் தீர்க்க வேண்டும்.” என்று என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
Also Read: கோடையில் அதிகபட்ச வரம்புக்கு பெட்ரோல் நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் என்றதா இந்தியன் ஆயில்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
தமிழ்நாடெங்கும் கோமியப் பந்தல் அமைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
ஜூனியர் விகடன் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் ஜூனியர் விகடன் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விகடன் தரப்பைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டதற்கு, இது பொய்யான நியூஸ்கார்ட் என்று விடையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். அவரும் இத்தகவல் பொய்யானது என்று உறுதி செய்தார்.
Also Read: கடத்தல் மண் எடுத்து தரப்படும்; வைரலாகும் பெயர் பலகையின் உண்மை பின்னணி!
Conclusion
நமது விரிவான ஆய்வுக்குப்பின், தமிழ்நாடெங்கும் கோமியப் பந்தல் அமைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Source
Newschecker Conversations
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.