கோடையில் அதிகபட்ச வரம்புக்கு வாகனத்தில் பெட்ரோல் நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

“வரும் நாட்களில் வெப்பநிலை உயரும் என்பதால் அதிகபட்ச வரம்பிற்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் தொட்டி வெடிப்பதற்கு வழிவகை செய்யும் .தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி தொட்டியில் எரிபொருளை நிரப்பி, காற்றுக்காக பாதி தொட்டியை மீதம் வைக்கவும். இந்த வாரம் அதிகபட்சமாக பெட்ரோல் நிரப்பியதால் 5 வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளது.தயவு செய்து பெட்ரோல் டேங்கை ஒரு நாளைக்கு ஒரு முறை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியே வர விடவும்.” என்று இந்தியன் ஆயில் எச்சரித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கோடையில் அதிகபட்ச வரம்புக்கு வாகனத்தில் பெட்ரோல் நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரித்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்தோம்.
இந்தியன் ஆயில் இவ்வாறு ஒரு எச்சரிக்கையை வெளியிட்டதா என்று தேடினோம். இத்தேடலில் வைரலாகும் இந்த அறிவிப்பு பொய்யானது. இதை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இத்தகவலை மறுத்து, அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,
வெப்பநிலை உயரும் என்பதால் அதிகபட்ச வரம்பிற்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் தொட்டி வெடிப்பதற்கு வழிவகை செய்யும். உங்கள் வாகனத்தில் பாதி தொட்டியில் எரிபொருளை நிரப்பி, காற்றுக்காக பாதி தொட்டியை மீதம் வைக்கவும் என்று கூறி வதந்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்த அறிவிப்பை இந்தியன் ஆயில் வெளியிடவில்லை. மேலும், ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பருவநிலை உள்ளிட்ட அனைத்து சாத்தியக் கூறுகளையும் மனதில் வைத்து, உரிய பாதுகாப்பு அம்சங்களுடனே அவர்களின் பொருட்களை தயாரிக்கின்றனர். அதிகபட்சமாக வாகனத்தில் எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப வேண்டும் என்பது எரிபொருள் டேங்கில் தயாரிப்பு நிறுவனங்களால் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த அளவு வரை எந்த பருவநிலையாக இருந்தாலும் எரிபொருளை அதிகபட்சமாக நிரப்பி கொள்ளலாம். அது பாதுகாப்பானதே.
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Also Read: சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு 39,532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதா?
Conclusion
கோடையில் அதிகபட்ச வரம்புக்கு வாகனத்தில் பெட்ரோல் நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரித்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Source
Indian Oil Corporation Tweet
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)