Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
பிரதமர் மோடி-ஜெர்மன் பிரதமர் சந்திப்பில் ஜவஹர்லால் நேரு படம் இடம்பெற்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பிரதமர் மோடி அவர்கள் மூன்று நாள் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய மூன்று நாடுகளுக்கு அண்மையில் பயணம் செய்து முடித்தார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த திங்களன்று ( மே 2) ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின்போது இவர்கள் பேசிய அறையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெற்றதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பிரதமர் மோடி-ஜெர்மன் பிரதமர் சந்திப்பில் ஜவஹர்லால் நேரு படம் இடம்பெற்றதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என்பதை அறிய முடிந்தது. பிரதமர் மோடி இச்சந்திப்பு குறித்து அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். கூடவே இச்சந்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரதமர் பதிவிட்ட புகைப்படத்தில் நேரு படம் இடம்பெறவில்லை.
இச்சந்திப்பு குறித்து ஊடகங்களிலும் செய்தி வந்திருந்தது. இச்செய்திகளில் இடம்பெற்ற புகைப்படத்திலும் நேரு புகைப்படம் இடம்பெறவில்லை. ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
Also Read: பட்டினப்பிரவேச பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று கூறினாரா தருமபுரம் ஆதீனம்?
Conclusion
பிரதமர் மோடி-ஜெர்மன் பிரதமர் சந்திப்பில் ஜவஹர்லால் நேரு படம் இடம்பெற்றதாக கூறி வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Manipulated Media / Altered Photo
Sources
The Times Of India
Twitter Account of PMO India
(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.