திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact CheckViralபாகிஸ்தான் உணவுப் பஞ்சத்தின் தற்போதைய நிலை என்று பரவும் பழைய வீடியோ!

பாகிஸ்தான் உணவுப் பஞ்சத்தின் தற்போதைய நிலை என்று பரவும் பழைய வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பாகிஸ்தான் உணவுப்பஞ்சத்தின் தற்போதைய நிலை என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot from Twitter @KumaresanVeera4

“இதுதான் பசியின் உச்சகட்ட கொடுமையோ. ஒரு மூட்டை கோதுமை. இதுதான் தற்போதைய பாகிஸ்தான் நிலைமை. கடவுள், மதம், இதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் மற்ற பொருளாதார வளர்ச்சி துறைகளை கண்டுகொள்ளாமல் ஊழல்வாதிகளை ஊக்குவிக்கும் எல்லா அரசுகளுக்கும் இதுதான் நிலைமை இந்தியாவிற்கும்” என்பதாகப் பரவுகிறது.

Screenshot from Twitter Twitter @KumaresanVeera4
Screenshot from Twitter @SURULIVEL1971

செய்தி நிறுவனங்களும் இதனை “பாகிஸ்தான் உணவுப்பஞ்சம்” என்றே ஷேர் செய்து வருகின்றன.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?

Fact check/Verification

பாகிஸ்தான் உணவுப்பஞ்சத்தின் கொடுமை;பசியின் உச்சகட்ட கொடுமையால் ஒரு மூட்டை கோதுமைக்கு அடித்துக் கொள்ளும் அவலம் என்று பரவுகின்ற வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், குறிப்பிட்ட வீடியோ செப்டம்பர் 2022இல் எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த செப்டம்பர் 13, 2022 அன்று பாகிஸ்தான் அன்டோல்ட் என்கிற செய்தி நிறுவனம் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

மேலும், கடந்த செப்டம்பரில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் உணவுக்காக அடித்துக் கொண்ட சம்பவம் என்று இந்த வீடியோவைப் பலரும் பதிவிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளரான அன்டானியோ குட்ரெஸ் கடந்த செப்டம்பர் 9, 2022 அன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு நிவராணப்பணிகள் தொடர்பாக சந்தித்து பேசியதாக இட்டுள்ள ட்விட்டர் பதிவின் கீழ், ”Dear Mr. Antoni Guterres, have a look of these video. This is sindh, from where Bilawal Bhutto won the NA Seat and became foreign minister. You know what people are fighting for? Food. Bilawal and his party ruling sindh for 30 years. I would like to visit Bilawal house also” என்று இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய உணவுப்பஞ்சத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல இது; கடந்த செப்டம்பர் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. கடந்த வருடம் வெள்ளப்பெருக்கால் உணவு, இருப்பிடம் என்று தவித்த பாகிஸ்தான் மக்கள், தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் உணவுப்பஞ்சத்தில் தவித்து வருகின்றனர்.

Also Read: கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

Conclusion

பாகிஸ்தான் உணவுப்பஞ்சத்தின் கொடுமை;பசியின் உச்சகட்ட கொடுமையால் ஒரு மூட்டை கோதுமைக்கு அடித்துக் கொள்ளும் அவலம் என்று பரவுகின்ற வீடியோ கடந்த செப்டம்பர் 2022 பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கின்போது எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Twitter Post From, Pakistan Untold, Dated September 12, 2022
Twitter Post Reply From, António Guterres, Dated September 09, 2022
Facebook Post From, Wasaib Diyan Ronqan, Dated September 06, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular