செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2024
செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2024

HomeFact Checkதன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக பரவும் போலி...

தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஈவிகே இளங்கோவன் உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தான் நலமாக உள்ளதாகவும் கூடிய விரைவில் வீடு திரும்புவேன் என்றும் கூறி ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் மீண்டும் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

இந்நிலையில் ”தேர்தல் வெற்றிக்கு பிறகு என் உடல்நிலை நன்றாகவே இருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் 10 ஆயிரம் வாக்குகளை தாண்டி வாங்கிவிட்டார் என்று சொன்னதில் இருந்தே நான் இதய பாதிப்புக்குள்ளானேன். என் மருத்துவ செலவை சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@Farmerson201
 தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/subins.subin.359
 தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/நா த க மாணவர்கள்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

Factcheck / Verification

தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டை உற்று நோக்கும்போது அதில் காணப்படும் எழுத்துரு (Font) வழக்கமாக சன் நியூஸில் பயன்படுத்தப்படும் எழுத்துருவிலிருந்து மாறுபட்டிருந்தது. மேலும் சன் நியூஸ் லோகோ வரும் இடத்தில் புகைப்படம் அழிக்கட்டிருந்தது, செய்தி பகுதியில் காணப்படும் வாட்டர்மார்க் லோகோவும் அழிக்கப்பட்டிருநதது.

 தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போதே வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகியது. இதனைடுத்து சன் நியூஸின் சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்கையில் வைரலாகும் நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை

தொடர்ந்து சன் நியூஸின் சமூக ஊடகப் பொறுப்பாளர் மனோஜ் குமாரை விசாரிக்கையில்,  வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அவர் உறுதி செய்தார்.

Also Read: Fact Check: ஜம்மு-காஷ்மீரில் அமைந்த உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் என்று பரவிய சீனா வீடியோ!

Conclusion

தன் மருத்துவ செலவுக்கு சீமான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Phone Conversation with Manoj Kumar, Sun News, dated March 27, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular