வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkராகுல் காந்தி பெண் ஒருவரை முத்தமிடுவது போன்று பிரியங்கா காந்தி முகத்தில் பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார்...

ராகுல் காந்தி பெண் ஒருவரை முத்தமிடுவது போன்று பிரியங்கா காந்தி முகத்தில் பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார் முகத்தை எடிட் செய்து பரப்பும் பாஜகவினர்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ராகுல் காந்தி பெண்மணி ஒருவரை முத்தமிடுவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”நம்ம ஒன்னும் சொல்ல வேண்டாம் பின்னால உதவியாளர் முகத்தை பாருங்க போதும்” என்கிற பதிவுடன் இந்த புகைப்படம் வைரலாகிறது.

Screenshot From Facebook/KumariMuthuKumarBJP
Screenshot From Facebook/Sanal Kumar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஈரோடு கிழக்கில் திமுகவினரை பொதுமக்கள் விரட்டினரா?

Fact Check/Verification

ராகுல் காந்தி பெண்மணி ஒருவரை முத்தமிடுவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அதுகுறித்து ஆராய்ந்தோம்.

குறிப்பிட்ட புகைப்படத்தில் இடம் பெற்றிருப்பது பிரியங்கா காந்தி என்பது செய்திகள் மூலம் நாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் அதை உறுதி செய்து கொள்ள வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அதன் முடிவில், கடந்த ஜனவரி மாதம் உத்திர பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரைக் கூட்டம் நடைபெற்ற போது அங்கு கூட்ட மேடையில் தனது சகோதரி பிரியங்காவை பாசத்துடன் அணைத்து முத்தமிட்டிருந்தார் ராகுல் காந்தி. குறிப்பிட்ட நிகழ்வை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் உட்பட பலரும் பகிர்ந்திருந்தனர்.

பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “Unconditional Love of Brother and Sister” என்கிற தலைப்பில் இந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

பாரத் ஜோடோ யாத்திரையில் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலும் ஜனவரி 03 அன்று இப்புகைப்படத்தொகுப்பு இடம் பெற்றிருந்தது.

தொடர்ந்து, பிரியங்கா காந்தியின் முகத்தில் மார்ஃப் செய்யப்பட்டிருக்கும் முகம் யார் என்று தேடுதலை மேற்கொண்டபோது, அது பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார் என்பது தெரிய வந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு NDTVயில் இருந்து ரவிஷ் குமார் வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது புகைப்படத்தையே தற்போது நெட்டிசன்கள் பிரியங்கா காந்தி முகத்தில் எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

Also Read: நீட் தேர்வு கொண்டு வந்ததே திமுகதான் என்று பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை என்ன?

Conclusion

ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை முத்தமிடும் புகைப்படத்தில் பிரியங்காவின் முகத்திற்கு பதிலாக பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார் முகம் மார்ஃப் செய்து பரப்பப்படுகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources
Twitter Post From, Bharat Jodo, Dated January 03, 2023
Twitter Post From, Congress, Dated January 03, 2023
Report From, Times Of India, Dated January 04, 2023
Report From, News 18 Tamil, Dated Janaury 03, 2023
Image Album From, Bharat Jodo Yatra Website, Dated January 03, 2023



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular