வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkசீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக பரவும் எடிட் வீடியோ!

சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக பரவும் எடிட் வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டார்.
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘தான் ஒரு மலையாளி’ என்று ஒப்புக்கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
Screengrab from Twitter@jani_raman6
 சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
Screengrab from Facebook/raman.thalapathy
 சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
Screengrab from Facebook/dmkkumbakonam82

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: VIP Bags மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டதா?

Factcheck / Verification

சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. நாம் தமிழ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் 03/04/2016 அன்று ’சீமான் எழுச்சியுரை – மதுரை பொதுக்கூட்டம்’ என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அவ்வீடியோவின் 19 நிமிடம் 25 விநாடியில் கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி குறித்து  சீமான் பேசி இருந்தார்.

அதில்,வெறிகொண்டு அந்நாட்டின் இளைஞர்கள் அதிகாரத்தை கேட்டு வருகிறார்கள். அவர்கள் அதிகாரத்தை கேட்பது சரிதான். அவர்கள் நிலத்தை அவர்கள்தான் ஆள வேண்டும். என்னை கேள், நான் திராவிடனா? மலையாளியா? என்றால் நான் மலையாளி என்றுதான் சொல்வேன். ஒரு தமிழன் முதலமைச்சராகி அந்த நாட்டை ஆளுகின்றானென்றால், அவன் அழைக்காவிட்டாலும் நான் முன் வரிசையில் இருந்து வாழ்த்துவேன்’ என்று உம்மன் சாண்டி கூறியதாக சீமான் பேசியுள்ளார்.

நான் திராவிடனா? மலையாளியா? என்றால் நான் மலையாளி என்றுதான் சொல்வேன் என்று உம்மன் சாண்டி கூறியதாக சீமான் கூறியதை, சீமான் தான் ஒரு மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக திரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது நமக்கு இதன் மூலம் புலனாகின்றது.  

Also Read: சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக பரவும் பொய் தகவல்!

Conclusion

சீமான் மலையாளி என்று ஒப்புக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Youtube Video from Naam Tamilar Katchi, Dated April 03, 2016

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular