ஞாயிற்றுக்கிழமை, மே 5, 2024
ஞாயிற்றுக்கிழமை, மே 5, 2024

HomeFact Checkகள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்கும் வீடியோ 2024 பொதுத்தேர்தலில் எடுக்கப்பட்டதா?

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்கும் வீடியோ 2024 பொதுத்தேர்தலில் எடுக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: 2024 பொதுத்தேர்தலில் கள்ள ஓட்டை தட்டிக் கேட்ட மநீம நிர்வாகி

Fact: வைரலாகும் வீடியோ 2 ஆண்டுளுக்கு முந்திய பழைய வீடியோவாகும். இந்நிகழ்வு 2022 ஆம் ஆண்டு நடந்த மாநகராட்சித் தேர்தலில் நடந்ததாகும்.

இந்தியாவில் 2024 பொதுத்தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்த முடிவெடுக்கப்பட்டு கடந்த வெள்ளியன்று (ஏப்ரல் 19) முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் தமிழகத்தின் 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102  தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவுற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடந்த தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும், அதை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி தட்டிக்கேட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்டதாக பரவும் வீடியோ

X Link | Archive Link

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்டதாக பரவும் வீடியோ

X Link

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்டதாக பரவும் வீடியோ

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?

Fact Check/Verification

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்டதாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் @syedthousif என்ற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் பிப்ரவரி 21, 2022 அன்று இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்டதாக பரவும் வீடியோ

தொடர்ந்து வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து தேடுகையில் மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் “கள்ள ஓட்டு போட்டுக்கொண்டிருந்த திமுக-வினரை தடுத்த ஈரோடு மாவட்ட மநீம வேட்பாளர் திருமதி. விஜி அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பு” என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

அவ்வீடியோவில் மநீம நிர்வாகி விஜி வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட நிகழ்வு குறித்து விளக்கியிருந்ததை காண முடிந்தது.

வைரலாகும் வீடியோவிலும் விஜி இருந்ததை நம்மால் காண முடிந்தது.

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்டதாக பரவும் வீடியோ

இதனையடுத்து தேடுகையில் மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து பிப்ரவரி 20, 2022 அன்று பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் இச்சம்பவம் குறித்த மற்றொரு வீடியோவும், ஈரோடு மாவட்டத்தின் வார்டு எண் 49-ல் உள்ள வாக்குச்சாவடிகள் 253, மற்றும் 254-ல் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி விஜி கொடுத்த மனுவும் பகிரப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின் தெளிவாகுவது யாதேனில்,

  1. வைரலாகும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு, 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.
  2. வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவத்திற்கும் 2024 பொதுத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்புமில்லை; இச்சம்பவம் 2022 மாநகராட்சி தேர்தலின்போது நடைப்பெற்றதாகும்.

 Also Read: வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?

Conclusion

கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்டதாக பரவும் வீடியோ 2022 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Tweet from the user, @syedthousif, Dated February 21, 2022
Facebook post from Maiam, Dated February 22, 2022
Tweet from Makkal Neethi Maiam, Dated February 20, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular