வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Check‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?

‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: நரக பேருந்து நிலையம் என்று முகப்பு பலகை வைத்தது கோவை மாநகராட்சி

Fact: வைரலாகும் பெயர் பலகை எடிட் செய்யப்பட்டதாகும்.

கோயம்புத்தூர் மாநகராட்சி நகர பேருந்து நிலையம் என்பதற்கு பதிலாக நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக வைரலாகும் படம்
Screenshot from Twitter@l6Uu2YIKmMzZujj

Twitter Link | Archived Link

கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக வைரலாகும் படம்
Screenshot from Twitter@umasenthilbjp

Archived Link

கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக வைரலாகும் படம்
Screenshot from Twitter@e9NIslv0uktMwJz

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூர் வன்கொடுமையில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் நபர்கள் என்று பரவும் புகைப்படத் தகவல் உண்மையா?

Fact Check/Verification

கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, கூகுள் லென்ஸை பயன்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் coimbatore-biz.com எனும் இணையத்தளத்தில் கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் என்று குறிப்பிட்டு இதே படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் எழுத்துப்பிழை எதுவும் இன்றி நகர பேருந்து நிலையம் என்றே பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்தது.

கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக வைரலாகும் படம்
Screengrab from coimbatore-biz.com

தொடர்ந்து தேடுகையில் தி இந்து இணையத்தளத்தில் Coimbatore Corporation’s bus terminal project to factor in flyover design என்று தலைப்பிட்டு 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட்ட செய்தியிலும், Efforts on to regulate buses at Gandhipuram Bus Stand என்று தலைப்பிட்டு 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிட்ட செய்தியிலும் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்படங்களிலும் எழுத்துப்பிழை இல்லாமலேயே பெயர்பலகை இருந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகின்றது. உண்மையானப் படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

தொடர்ந்து தேடுகையில் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் பெயர் பலகையின் நிறம் நீல நிறத்திலிருந்து வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டிருப்பதை நம்மால் அறிய முடிந்தது.

காந்திபுரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு 3 மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டதாக சிம்ப்ளிசிட்டி இணையத்தளத்தில் மே 10, 2022 அன்று செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இச்செய்தியில் காந்திபுர பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்ட போராட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. அதில் ஒரு படத்தில் காந்திபுர பேருந்து நிலைய பெயர் பலகை வெள்ளை நிறத்தில் இருப்பதை காண முடிந்தது

கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
Screengrab from Simplicity.com

இதனையடுத்து தகவல் வ்லாகர் எனும் யூடியூப் சேனலில் காந்திபுரம் பேருந்து நிலையம் குறித்து 5 மாதங்களுக்கு முன்னர், பிப்ரவரி 16 ஆம் தேதி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதிலும் வெள்ளை நிறத்திலேயே பெயர் பலகை  இருந்தது.

கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,

  1. வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
  2. தற்போதைய கோயம்புத்தூர் காந்திபுர பேருந்து நிலையத்தின் பெயர் பலகை வைரலாகும் படத்திலிருப்பதுபோல் நீல நிறத்தில் இல்லை; அது வெள்ளை நிறத்தில் உள்ளது.

Also Read: குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

கோயம்புத்தூர் மாநகராட்சி நரக பேருந்து நிலையம் என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Article from coimbatore-biz.com

Report from The Hindu, Dated May 26, 2014
Report from The Hindu, Dated July 23, 2016

Report from Simplicity, Dated May 10, 2022
Youtube video from Thagaval Vlogger, Dated Feb 16, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular