வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkகுஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் முற்றிலுமாக அகற்றப்படுகிறது

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். 

குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”மதுவிலக்கு சட்டத்தை அகற்ற குஜராத் அரசு அதிரடி முடிவு. வரி வருவாயை அதிகரிப்பதற்காக 62 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு சட்டத்தை முற்றிலுமாக நீக்க குஜராத் மாநில அரசு முடிவு” என்று தந்தி டிவி மற்றும் மாலைமலர் வெளியிட்டதாக இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது. மாலைமலர் நியூஸ்கார்டினை நமக்கு அனுப்பி அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார் நியூஸ்செக்கர் வாசகர் ஒருவர்.

Screenshot from Twitter @Jasmine01737661

Archived Link

NewsChecker WhatsApp Bot
குஜராத்தில் மதுவிலக்கு சட்டம்
Screenshot from Facebook/arun.prasath.58

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் என்று பரவும் பொய் தகவல்!

Fact Check/Verification

குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக பரவும் நியூஸ்கார்ட் குறித்து உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக செய்தி ஏதேனும் வெளியாகியுள்ளதா என்று குஜராத் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கம் உள்ளிட்டவற்றில் ஆராய்ந்தோம். ஆனால், ஊடகங்களிலோ அதிகாரப்பூர்வ பக்கங்களிலோ அவ்வாறு எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.

தொடர்ந்து வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி மற்றும் மாலைமலர் பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆராய்ந்தபோது அவ்வாறு நியூஸ்கார்ட் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்வு என்கிற செய்தியே தந்தி டிவியில் வெளியாகியிருந்தது.

மாலைமலர் கடந்த 19ஆம் தேதியன்று ”தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு” என்று வெளியிட்டிருந்த நியூஸ்கார்டினை எடுத்தே குறிப்பிட்ட மாலைமலர் வைரல் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டுள்ளது.

Instagram will load in the frontend.
Edited News Card
Original News Card

இதுதொடர்பாக, தந்தி டிவியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; தந்தி டிவி வெளியிட்டது அல்ல” என்று உறுதி செய்தார்.

மேலும், இதுகுறித்து மாலைமலரின் ஆசிரியர் ரதேஷை தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது” என்று விளக்கமளித்தார்.

Also Read: டெல்லி அரசு பள்ளியில் பாரத மாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுகிறதா?

Conclusion

குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with, Vinoth, Thanthi Tv Digital, Dated July 25, 2023
Phone Conversation With, Rathesh, Malaimalar, Dated July 25, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular