Authors
Claim: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கட்டப்பட்ட கழிவறைகள்
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் கழிவறைகள் வாரணாசியில் அமைக்கப்பட்டதாகும்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக உத்திரப்பிரதேச அரசு திறந்தவெளியில் கழிப்பறைகள் உருவாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து சீர்வரிசை என்று பரவும் நொய்டா வீடியோ!
Fact Check/Verification
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கட்டப்பட்ட கழிவறைகள் என்று குறிப்பிட்டு பரவும் வீடியோ குறித்து ஆராய்கையில், இதே வீடியோவானது வாரணாசியில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரவியதை காண முடிந்தது.
அவ்வீடியோவில் “பனாரஸ் காட்சிகள்” என்று இந்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது. வாரணாசிக்கு மற்றொரு பெயர் பனாரஸாகும்.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் Ankit Promo எனும் யூடியூப் பக்கத்தில் டிசம்பர் 13, 2023 அன்று வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதில் அவ்வீடியோவானது வாரணாசி ஸ்வர்வேத் மஹாமந்திரில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
அவ்வீடியோவில் காணப்பட்ட கழிவறைகளின் காட்சிகள் வைரலாகும் வீடியோவில் காணப்படும் கழிவறைகளின் காட்சிகளோடு ஒத்துப்போவதை காண முடிந்தது. மேலும் இவ்வீடியோவில் அக்கழிவறைகள் திரைபோட்டு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
AMT YouTuber எனும் யூடியூப் பக்கத்திலும் இந்த கழிவறைகள் குறித்து வீடியோ வெளியிடப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் அயோத்தி ராமர் கோவிலில் 1500 ஃபைபர் கழிப்பறைகளும், பெண்களுக்காக 150 உடைமாற்றும் அறைகளும் அமைக்கப்பட இருப்பதாக நியூஸ் 18 உத்திரப்பிரதேசத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியில் காணப்பட்ட கழிவறைகள் வைரலாகும் வீடியோவிலிருந்து மாறுப்பட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் இதுக்குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: அயோத்தியில் 25,000 ஹோமகுண்டங்கள் என்று பரவும் வாரணாசி வீடியோ!
Conclusion
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கட்டப்பட்ட கழிவறைகள் என்று பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவை வாரணாசி ஸ்வர்வேத் மஹாமந்திரரின் கழிவறைகளாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் மலையாளத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.)
Result: False
Our Sources
Twitter video from the user @VnjkA on January 03, 2024
Youtube video by Ankit Promo on December 13,2023
Youtube video by AMT YOUTUBER on December 11,2023
Twitter video by News18 Uttar Pradesh on December 18,2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)