திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkதமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்றுலா செல்வதாகப் பரவும் பழைய செய்தி வீடியோ!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்றுலா செல்வதாகப் பரவும் பழைய செய்தி வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஊரே பஸ் ஸ்டிரைக்கில் ஸ்தம்பித்து கிடக்கிறது! எது நடந்தால் எனக்கென்ன என்று இன்ப சுற்றுலா செல்கிறார் ஸ்டாலின்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் அவர் சிங்கப்பூர் சென்றபோது வெளியான செய்தியாகும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்றுலா செல்வதாக செய்தி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“ஊரே பஸ் ஸ்டிரைக்கில் ஸ்தம்பித்து கிடக்கிறது! எது நடந்தால் எனக்கென்ன என்று இன்ப சுற்றுலா செல்கிறார் ” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

தமிழக முதல்வர்
Screenshot from X @009Thala

Archived Link

Screenshot from X @titusgna

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்றுலா செல்வதாக பரவும் வீடியோ செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம், அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்தார். ஆனால், அவர் இன்று சிங்கப்பூர் செல்வதாக செய்திகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.

வருகின்ற ஜனவரி 28ஆம் தேதியன்று அவர் தொழில் முதலீடுகளுக்காக ஸ்பெயின் செல்லவிருப்பதாக மட்டுமே புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, வைரலாகும் நியூஸ் 18 வீடியோ காட்சியை கீ-வேர்டுகள் மூலமாகத் தேடியபோது கடந்த மே 22, 2023 அன்று முதலமைச்சரின் சிங்கப்பூர் பயணம் குறித்த செய்தியை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்தது.

குறிப்பிட்ட செய்தியை எடுத்தே அவர் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சிங்கப்பூர் செல்வதாக பரப்பப்படுகிறது என்பது நமக்குத் தெளிவாகியது.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்றுலா செல்வதாக பரவும் வீடியோ செய்தி  தவறாகப் பரப்பப்படுகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from Puthiyathalaimurai, Dated May 24, 2023
Twitter Post from M.K.Stalin, Dated May 24, 2023
YouTube Video from News 18 TamilNadu, Dated May 22, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular