திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஅயோத்தியில் 25,000 ஹோமகுண்டங்கள் என்று பரவும் வாரணாசி வீடியோ!

அயோத்தியில் 25,000 ஹோமகுண்டங்கள் என்று பரவும் வாரணாசி வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: 25 ஆயிரம் ஹோம குண்டங்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

Fact: இத்தகவல் தவறானதாகும். இந்த ஹோமகுண்டங்கள் வாரணாசியில் அமைக்கப்பட்டவையாகும்.

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கிற்காக 25,000 ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”25 ஆயிரம் ஹோம குண்டங்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்” என்று இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

அயோத்தியில்
Screenshot from X @HeavenVellore

Archived Link

Screenshot from Facebook/Puttarajgowdaru

Facebook Link

Screenshot from Facebook/Prem Kumar Saisangith

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பே பற்றி எரியும் உபி ரயில் நிலையம் எனப்பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கிற்காக 25,000 ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ஹோமகுண்டங்கள் இடம்பெற்றுள்ள வீடியோ வாரணாசி ஸ்வர்வேத் மஹாமந்திர் துவக்க விழாவின் போது கடந்த டிசம்பர் 18, 2023 அன்று எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

India Tourist Masti என்னும் யூடியூப் பக்கத்தில் கடந்த டிசம்பர் 18, 2023 அன்று Swarved Mahamandir Dham Umarha Varanasi என்கிற தலைப்பில் இடம்பெற்றுள்ள வீடியோவில் வைரலாகும் வீடியோவில் உள்ள ஹோமகுண்டங்களின் முன்பாக மக்கள் அமர்ந்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், vlog mirror என்னும் யூடியூப் பக்கத்தில் கடந்த டிசம்பர் 11, 2023 அன்று வெளியாகியுள்ள வீடியோவில் இந்த ஹோமகுண்டங்கள் அமைக்கப்படும் வீடியோ இடம்பெற்றுள்ளது.

Arun Village Boy Vlog என்னும் யூடியூப் பக்கத்திலும் வைரல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் இடத்தில் குறிப்பிட்ட யூடியூப் நபர் மக்களிடம் பேட்டியெடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதிலிருக்கும் கொடியும், வைரல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் கொடியும் ஒன்று என்பதையும் நாம் உறுதி செய்தி கொண்டோம்.  ஸ்வர்வேத் மஹாமந்திர் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் இந்த கொடி வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து, நம்முடைய தேடலில் banarasiboy0001 என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே வீடியோ கடந்த டிசம்பர் 18, 2023 அன்று ஸ்வர்வேத் மஹாமந்திர் தம் என்கிற ஹேஷ்டேக்குடன் தெளிவாக இடம்பெற்றிருப்பதை நாம் கண்டறிந்தோம். இந்த வீடியோவே தற்போது அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கிற்காக அமைக்கப்பட்ட ஹோமகுண்டங்கள் என்று பரவி வருகிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது. 

Instagram will load in the frontend.

ஸ்வர்வேத் மஹாமந்திர் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்வும், அதில் 25,000 ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தது என்கிற செய்தியும் முறையே PMO India யூடியூப் பக்கத்திலும், PIB செய்தியிலும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியுள்ளதா?

Conclusion

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கிற்காக 25,000 ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் வீடியோ வாரணாசியில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram post banarasiboy0001, Dated December 18, 2023
Report from PIB


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular