Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜகவினர் மது அருந்தினர்.
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய வீடியோவாகும்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக பிஜேபி கட்சியினர் அழைத்துச் செல்லும் தீவிர ராம பக்தர்கள் என்று குறிப்பிட்டு கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் கும்பகோணத்தில் பக்தர்கள் கூடியதாக பரவும் பழைய வீடியோ!
Fact Check/Verification
ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜகவினர் மது அருந்தியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் “Alcohol+ UP+ Yogi= Abuser, Painkiller is distributing @narendramodi, Yes. All okay?” என்று குறிப்பிட்டு உத்திரப்பிரதேச காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதே வீடியோவானது டிசம்பர் 20, 2021 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அதேபோல் இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸும் டிசம்பர் 20, 2021 அன்று அவரது எக்ஸ் பக்கத்தில் இதே வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோ என்பது தெளிவாகின்றது. ஆகவே இவ்வீடியோவுக்கும் அண்மையில் நடந்த ராமர் கோவில் திறப்பு விழாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகின்றது.
Also Read: புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் என்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த தந்தி டிவி!
Conclusion
ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜகவினர் மது அருந்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளிவந்த பழைய வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from UP Congress, Dated December 20, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.