திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkபுர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் என்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த தந்தி டிவி!

புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் என்று எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த தந்தி டிவி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: துபாய் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் மின்னொளியில் ஒளிர்ந்த ராமர்
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று தந்தி டிவி புகைப்படம் ஒன்றை நியூஸ்கார்டாக பகிர்ந்திருந்தது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றதாக பகிர்ந்திருந்தது. ஆனால், தற்போது தந்தி டிவி தனது பதிவை நீக்கி விட்டது. எனினும், பாஜகவினர் உள்ளிட்ட பலரும் இப்புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Screenshot from X ThanthiTV

Archived Link

Screenshot from X @SowdhaMani7

Archived Link

Screenshot from X @Shibin_twitz

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழ்நாட்டில் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை திறக்க இன்று தடை என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று தந்தி டிவி பகிர்ந்த புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படம் புர்ஜ் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தபோது அவ்வாறு ராமர் கோயில் திறப்புவிழாவிற்காக சிறப்பாக எந்த காட்சியும் இடம்பெற்றிருக்கவில்லை.

Instagram will load in the frontend.

தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்ந்தபோது கடந்த நவம்பர் 05, 2021 அன்று நடிகர் துல்கர் சல்மான் அவரது Kurup திரைப்படத்தின் ட்ரெய்லர் மலையாளத் திரையுலகில் முதன்முறையாக புர்ஜ் கலீஃபாவில் திரையிடப்படுவதாக வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

Instagram will load in the frontend.

குறிப்பிட்ட வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்கிராப் செய்யப்பட்ட புகைப்படத்தில் ராமர் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகியது.

மேலும், கடந்த அக்டோபர் 22, 2019 அன்று கொலொராடோவைச் சேர்ந்த ஃபுட் பிளாக்கர் ஒருவர் பதிவிட்டிருந்த “Best 12 Things To Do In Dubai” என்று பதிவிட்டிருந்த புர்ஜ் கலீஃபாவின் இரவு நேரக்காட்சி புகைப்படத்துடன் வைரல் புகைப்படத்தை ஒப்பிடும் போது அதில் ராமர் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

Also Read: ராமர் கோவில் கும்பாபிஷேகம்; இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடையா?

Conclusion

புர்ஜ் கலீஃபாவில் ஒளிரும் ராமர் உருவம் என்று தந்தி டிவி பகிர்ந்த புகைப்படம்  எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Source
Instagram post, Dulquer Salman, November 5, 2021
Best 12 Things To Do In Dubai, Julia’s Album, October 22, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular